டேய் என்னங்கடா பண்ணி வச்சுருக்கீங்க!.. வெங்கட் பிரபுவிற்கு அதிர்ச்சி கொடுத்த பிரகாஷ் ராஜ்!..
Actor Prakash Raj : தமிழ் சினிமாவில் உள்ள மிகவும் ஜாலியான இயக்குனராக அறியப்படுபவர் இயக்குனர் வெங்கட் பிரபு. மற்ற இயக்குனர்கள் போல இவர் பேட்டிகளில் டெரராக பேசாமல் மிகவும் ஜாலியாக அனைவருடனும் பேசக்கூடியவர்.
இதனாலேயே பொதுவாக வெங்கட் பிரபு அளிக்கும் பேட்டி என்றாலே அதை பொதுமக்கள் கூட சுறுசுறுப்பாக பார்ப்பது உண்டு. அவர் இயக்கிய படங்களில் செய்த குறைகள் குறித்து ஒரு பேட்டியில் கூறினார் அதில் முக்கியமாக சரோஜா திரைப்படத்தில் செய்த சம்பவம் ஒன்றை கூறியிருந்தார்.
பொதுவாக திரைப்படங்களைப் பொறுத்தவரை அதில் எடுக்கப்படும் காட்சிகள் சரியாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும். உதாரணத்திற்கு ஒரு காட்சியில் கதாநாயகி மஞ்சள் நிற ஆடை அணிந்து இருந்தால் அதனை தொடர்ந்து வரும் காட்சிகளிலும் அதே ஆடைதான் அணிந்திருக்க வேண்டும்.

ஒரு வேலை அவர் மாற்றி வேற ஆடை அணிந்து இருந்தால் அது மொத்த படப்பிடிப்பையும் கெடுத்துவிடும். மீண்டும் அவர்கள் அந்த காட்சியை எடுக்க வேண்டி இருக்கும். இப்படியாக சரோஜா திரைப்படத்தில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.
சரோஜா படத்தின் படப்பிடிப்ப நடத்தும் பொழுது அதில் பிரகாஷ்ராஜின் மகள் கதாபாத்திரம் கடத்தப்பட்டிருக்கும். அந்த கடத்தல் கும்பலை சந்திப்பதற்கு அவர் ஏரிக்கு செல்வதாக காட்சி இருக்கும் அதில் அவர் வீட்டில் இருந்து ஏறி கிளம்பும் பொழுது அவர் டை கட்டி இருப்பார்.
ஆனால் அங்கு சென்ற பிறகு நடக்கும் காட்சிகளில் பிரகாஷ்ராஜ் டையே கட்டி இருக்க மாட்டார். பிறகு வீட்டிற்கு வரும் பொழுது பார்த்தால் மிகவும் மீண்டும் டை கட்டி இருப்பார். இந்த காட்சியை எடிட்டிங்கில் பார்த்தபோது பிரகாஷ்ராஜ் மற்றும் வெங்கட்பிரபு இருவருமே அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அடேய் என்னங்கடா பண்ணி வச்சிருக்கீங்க என பிரகாஷ் ராஜ் அதிர்ச்சியாக கேட்டார். இருந்தாலும் அதை படத்தில் யாரும் கவனிக்கவில்லை என்று ஒரு பேட்டியில் வெங்கட் பிரபு கூறியிருந்தார்.