அந்த படத்தின் கதைதான் டிராகன்… விஷயம் தெரிந்து அதிர்ச்சியான பிரதீப் ரங்கநாதன்.!
குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக லவ் டுடே திரைப்படம் இருந்து வந்தது. அந்த திரைப்படத்தை தொடர்ந்து மூன்று திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன். சமீப காலமாக இப்படி பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் கதை களங்கள் அதிக விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றன.
ஆனால் பெரும்பாலும் அவர் நடிக்கும் கதைக்களங்கள் 2 கே கிட்ஸ் மத்தியில் பெரும் வரவேற்பை பெறுகின்றன. இந்த நிலையில் வழக்கமான காலேஜ் கதைகளத்தை கொண்டு உருவான படமாக டிராகன் திரைப்படம் இருந்து வருகிறது.
டிராகன் திரைப்படத்தின் கதைக்களம் அப்படியே டான் திரைப்படம் போல இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன. டான் திரைப்படத்திலும் ஆரம்பத்தில் கல்லூரியில் படிக்கும்போது ஜாலி செய்து கொண்டிருப்பார் சிவகார்த்திகேயன். பிறகு காதல் கதை செல்லும். அதற்கு பிறகு கல்லூரி முடித்தப்பிறகு வாழ்க்கையில் எப்படி முன்னேற போகிறார் என கதை செல்லும்.

அதே கதைதான் டிராகனும் என பேசப்பட்டது. சமீபத்தில் பேட்டியில் பேசிய பிரதீப் ரங்கநாதன் அதை உறுதிப்படுத்தியுள்ளார். அதில் கூறிய பிரதீப் ரங்கநாதன் யோசித்து பார்த்தால் டான் கதை போலவே எங்கள் படத்தின் கதையும் உள்ளது.
இது டான் 2 என்று எனக்கே சந்தேகம் வருகிறது. எங்களை எல்லாம் இயக்குனர் ஏமாற்றியுள்ளார் என காமெடியாக கூறியுள்ளார் பிரதீப் ரங்கநாதன்.
நாளை டிராகன் திரைக்கு வர இருக்கும் நிலையில் இந்த விஷயம் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.