News
வேகத்தை அதிகரித்த பூமி.. குறையும் நாட்கள்..! எச்சரிக்கை விடுக்கும் விஞ்ஞானிகள்.!
சமீப காலங்களாகவே அறிவியல் சார்ந்து நடக்கும் நிறைய விஷயங்கள் மக்களுக்கு பயத்தை ஏற்படுத்தி வருகிறது.
முக்கியமாக உலக அழிவு குறித்து எப்பொழுதுமே ஒரு வதந்தி என்பது மக்கள் மத்தியில் பரவிக்கொண்டுதான் இருக்கிறது. எப்போதுமே இந்த பயம் ஒரு பக்கம் மக்களுக்கு இருந்து வருகிறது.
இந்த நிலையில் பூமி தன்னை தானே சுற்றி வரும் வேகம் என்பது தற்சமயம் அதிகரித்து இருப்பது ஒரு அபாயகரமான விஷயமாக பார்க்கப்படுகிறது. கடந்த ஜூலை 9 ஆம் தேதி பூமி சாதாரணமாக சுற்றுவதை விடவும் அதிகமாக சுற்றி இருக்கிறது.
இதனால் ஜூலை 9 ஆம் தேதி 24 மணி நேரத்தில் 1.3 மில்லி செகண்ட் குறைவாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இதே மாதிரி பூமி இன்னும் அதிகமாக வேகமாக சுற்றினால் அது அதிக பிரச்சனையை ஏற்படுத்தும்.
வெப்பநிலை மாற்றம் காலநிலை மாற்றம் போன்றவற்றை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. மேலும் ஒரு வருடத்தில் 365 நாட்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதுவுமே குறையும் என்று கூறப்படுகிறது அல்லது ஒரு நாளைக்கு 24 மணி நேரங்கள் என்பது குறையலாம் இது பூமிக்கு ஒரு அபாயமாக முடியலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
