Cinema History
இளையராஜாகிட்ட எனக்கு மரியாதை கிடைக்காது. அவர் வர வேண்டாம்.. நேரடியாக சொன்ன பாக்கியராஜ்..!
பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்து பிறகு சினிமாவில் வாய்ப்பை பெற்று இயக்குனரானவர் பாக்கியராஜ். பாக்கியராஜை பொறுத்தவரை பெரும்பாலும் குடும்ப ஆடியன்ஸை ஈர்க்கும் வகையிலான கதை அமைப்பில்தான் திரைப்படங்களை இயக்குவார்.
இதனாலேயே அந்த சமயங்களில் பாக்கியராஜின் படங்களுக்கு தனி மவுசு இருந்து வந்தது. இப்போது இருக்கும் புகழ்பெற்ற இயக்குனர்களை விடவும் புகழ்பெற்றவராக பாக்கியராஜ் இருந்து வந்தார். ஆரம்பத்தில் பாக்கியராஜ் இயக்கிய திரைப்படங்களுக்கு இசையமைப்பாளர் கங்கை அமரன் தான் இசையமைத்து வந்தார்.
ஆனால் ஏ.வி.எம் நிறுவனத்தின் தயாரிப்பில் அவர் முந்தானை முடிச்சி திரைபபடத்தை இயக்க துவங்கிய பிறகு பாக்கியராஜின் படங்களுக்கு இளையராஜாதான் இசையமைத்து வந்தார். அதற்கு பிறகு பாக்கியராஜ் அவராகவே இசையமைக்க கற்றுக்கொண்டார்.
இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த நிலையில் இவர்கள் இருவரையும் குறித்து ஏ.வி.எம் ராஜன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில் அவர் கூறும்போது முந்தானை முடிச்சி படங்களுக்கு இசையமைக்கும் நாளில் நானும் அங்கு செல்வதாக இருந்தது.
ஆனால் அன்று இரவு போன் செய்த பாக்கியராஜ் ஏ.வி.எம் ராஜன் வந்தால் என்னை இளையராஜா மதிக்க மாட்டார். ஏனெனில் நான் ஒரு உதவி இயக்குனராக இருந்தவன். எனவே அவரை தயவு செய்து வர வேண்டாம் என கூறிவிடுங்கள் என கூறியுள்ளார்.
