உலகை திரும்பி பார்க்க வைத்த ககன்யான் திட்டம்!.. மாஸ் காட்டும் இஸ்ரோ.. விளக்கமா பார்க்கலாம் வாங்க!.

உலகில் ஒரு சில நாடுகள் விண்வெளியில் தங்களுடைய செல்வாக்கை நிலை நிறுத்தி வரும் நிலையில், இந்தியாவும் அந்நாடுகளுக்கு இணையாக பல சாதனைகளை புரிந்து வருகிறது. அதில் ஒன்று தான் சந்தியான் 3 நிலாவில் வெற்றிகரமாக தரை இறங்கிய நிகழ்வு.

சந்தியான் 3 வெற்றியைத் தொடர்ந்து உலகமே இந்தியாவை திரும்பிப் பார்த்தது. இந்நிலையில் இந்தியாவின் வளர்ச்சியை பல நாடுகளும் உற்று நோக்கி வரும் நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய கனவு திட்டம் தான் ககன்யான் திட்டம். இதன் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதை குறித்த அப்டேட்கள் சிலவற்றை இந்த பதிவில் பார்க்கலாம்

ககன்யான் இந்தியாவின் கனவுத் திட்டம்

நம் நாட்டில் எந்த ஒரு செயலை தொடங்கினாலும் அதற்கு ஒரு பெயர் வைக்கும் போது அதில் பல விஷயங்கள் இருக்கும். இந்நிலையில் ககன் என்றால் சமஸ்கிருத சொல்லுக்கு வானம் என்று பொருள். வானத்தை நோக்கி செல்லும் வாகனம் என்ற பொருளில் இந்த ககன்யான் என்னும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் தனது கனவு திட்டமாக ககன்யான் திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ககன்யான் திட்டத்தின் மூலம் வரும் 2025 ஆம் ஆண்டு விண்வெளி ஆய்வாளர்கள் விண்வெளிக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட உள்ளார்கள்.

kakanyan thittam
Social Media Bar

விண்வெளி ஆய்வாளர்கள் ராக்கெட் ஏவும் வாகனம் மார்க் -3 (LVM-3) மூலம் செலுத்தப்படும் ராக்கெட் பூமியிலிருந்து 400 கிலோமீட்டர் சுற்றிப் பாதையில் 3 நாட்கள் ஆய்வு செய்வார்கள். அதன் பிறகு பூமியில் பத்திரமாக தரையிறக்கப்படுவார்கள். அதாவது எதிர்பாராத அவசர நேரத்தில் ராக்கெட் காப்ஸ்யூல் தனியாக பிரிந்து இந்திய கடற்பரப்பில் விழச் செய்வது, பிறகு அதிலிருந்து விண்வெளி வீரர்கள் மீட்கப்பட்டு வருவார்கள். இதுதான் ககன்யான் திட்டத்தின் நோக்கம்.

மேலும் இதற்கான சோதனை ஓட்டமும் நடைபெற்று அதுவும் வெற்றிகரமாக முடிந்திருக்கிறது. இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்த நிலையில், பாராசூட் மற்றும் பிற மீட்பு ஆய்வுகள் சரியாக வேலை செய்கின்றனவா என பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இத்திட்டம் உள்நாட்டிலுள்ள நிபுணத்துவம், இந்திய தொழில்துறையின் அனுபவம், இந்திய கல்வித்துறை மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் அறிவுசார் திறன்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்களின் கிடைக்கும் அதிநவீன தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஒரு உகந்த உத்தி மூலம் நிறைவேற்றப்படுகிறது.

விண்வெளிக்கு செல்லும் இந்திய வீரர்கள்

பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், அங்கத் பிரதாப், அஜித் கிருஷ்ணன் மற்றும் சுபான்ஷு சுக்லா ஆகிய வீரர்கள் இந்திய விண்கலத்தில் விண்வெளிக்குச் செல்லும் ககன்யான் திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில் சந்தியான் 3 வெற்றி பெற்ற நிலையில் ஆகஸ்ட் 23 தேசிய விண்வெளி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவின் அடுத்த மிகப்பெரிய கனவான ககன்யான் திட்டம் பற்றிய காணொளி காட்சியை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. அதில் விண்வெளிக்கு செல்ல தயாராக உள்ள வீரர்கள் பயிற்சி பெறும் காட்சிகள் இடம் பெற்று இருக்கிறது.

பல்வேறு பரிசோதனைகளும் நடைபெற்று இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவிற்கு அடுத்தபடியாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிய நாடுகளின் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தை பெறும்.

Popular News

Categories

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.