அந்த நடிகையோட நடிக்கணுமா!.. துள்ளி குதித்த ஜெமினி கணேசனுக்கு எண்டு கார்டு போட்ட தயாரிப்பாளர்!.. அட கொடுமையே!..

Gemini Ganesan and Banumathi : எல்லா காலங்களிலும் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகள் என்று ஒருவர் இருந்து கொண்டுதான் இருப்பார். இப்போதைய காலகட்டத்தில் எப்படி நயன்தாரா பிரபலமானவராக இருக்கிறாரோ அதேபோல ஒரு காலத்தில் நதியா பிரபலமான நடிகையாக இருந்தார.

அவருக்கு முன்பும் பல நடிகைகள் பிரபலமான நடிகைகளாக இருந்தனர் ஆனால் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் சாவித்திரிக்கு இணையான சாவித்திரியை விட சிறப்பான ஒரு நடிப்பை வெளிப்படுத்தும் நடிகையாக இருந்தவர் நடிகை பானுமதி.

Bhanumathi
Bhanumathi
Social Media Bar

நடிகை பானுமதியுடன் சேர்ந்து ஒரு படமாவது நடித்துவிட வேண்டும் என்பது அப்பொழுது இருந்த நடிகர்களுக்கு பெரும் ஆசையாக இருந்தது. ஆனால் கதையில் அவருக்கு முக்கியமான கதாபாத்திரம் இருந்தால் மட்டுமே அந்த கதைகளில் நடிப்பார். இல்லை என்றால் அந்த திரைப்படத்தில் நடிக்க மாட்டார்.

அதாவது நாயகிக்கு முக்கியமான கதாபாத்திரம் இருக்கும் கதைகளை மட்டுமே அவர் தேர்ந்தெடுப்பார். இதனாலேயே எம்.ஜி.ஆர் சிவாஜி திரைப்படங்களாக இருந்தாலுமே கூட அதில் அவருக்கு முக்கியமான கதாபாத்திரம் இருந்தால் மட்டுமே பானுமதி நடிப்பார். இதற்காகவே அவர் நடிக்கும் திரைப்படங்களில் இயக்குனர்கள் அவருக்கு நிறைய காட்சிகளை எழுதுவதும் உண்டு.

சிவாஜியே கூட ஒரு முறை பேட்டியில் கூறும் பொழுது பானுமதி எனக்கு இணையான ஒரு நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர் அவருடன் இரண்டு படங்கள் சேர்ந்து நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக கருதுகிறேன் என்று கூறியிருந்தார்.

மெஸ்ஸியம்மா என்கிற திரைப்படத்தை இயக்கும் பொழுது அந்த திரைப்படத்தில் பானுமதி மற்றும் ஜெமினி கணேசனை வைத்து இயக்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால் தயாரிப்பாளருக்கும் பானுமதிக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அந்த படத்தில் இருந்து விலகினார் பானுமதி.

ஜெமினி கணேசன் பானுமதியுடன் நடிக்கப் போகிறோம் என்று கேட்டவுடனே பெரும் சந்தோஷத்தில் இருந்தார் ஏனெனில் அவர் பானுமதியுடன் சேர்ந்து ஒரு திரைப்படம் கூட நடித்தது கிடையாது. இது தனக்கு ஒரு நல்ல வாய்ப்பாகத்தான் இருக்கும் என அவர் கருதிய நேரத்தில் அந்த திரைப்படத்திலிருந்து பானுமதி விலகியதால் பிறகு ஜெமினி கணேசனுக்கு ஜோடியாக அதில் சாவித்திரி நடித்தார்.