News
இனி ஆண்ட்ராய்டு கேம்களை கணினியில் விளையாடலாம்!.. எக்ஸ் பாக்ஸிற்கு டஃப் கொடுக்கும் கூகுள்…
கணினி, லேப்டாப் மொபைல் என பல தொழில்நுட்ப கருவிகளை நாம் பயன்படுத்துகிறோம். ஒவ்வொரு கருவியும் ஓ.எஸ் என்னும் பயன்பாட்டு தளத்தை கொண்டுள்ளது. அதில்தான் நாம் நமக்கு தேவையான ஆப் மற்றும் சாஃப்ட்வேர்களை பயன்படுத்துகிறோம்.
உலகில் அதிகமாக பயன்பாட்டில் உள்ள ஓ.எஸ் ஆக மொபைல்களுக்கு ஆண்ட்ராய்டு ஓ.எஸ்ஸும் கணினிகளுக்கு விண்டோஸ் ஓ.எஸ்ஸும் உள்ளது. கேமிங் துறையில் ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸிற்கு இடையே பெரும் போட்டி உள்ளது.
ஏனெனில் கேமர்களை பொறுத்தவரை கணினி மற்றும் மொபைல் இரண்டிலுமே அதிகமான கேம் விளையாடுபவர்களே உள்ளனர். அதிலும் கால் ஆஃப் ட்யூட்டி, ஃப்ரி ஃபயர் போன்ற கேம்கள் வந்த பிறகு மொபைலில் கேம் விளையாடும் நபர்களின் எண்ணிக்கை கூடியுள்ளது.
ஆனால் காலம் காலமாக கணினியில் கேம் விளையாடி வருபவர்களுக்கு டச் தொழில்நுட்பத்தில் கேம் விளையாட அவ்வளவாக விருப்பம் இருப்பதில்லை. எனவே இவர்கள் ப்ளேஸ்டேஷன், எக்ஸ் பாக்ஸ் போன்ற உபகரணத்தை கொண்டு கேம் விளையாடுகின்றனர்.
இதில் கணினி கேம்கள் விளையாடுபவர்களும் அடக்கம். மொபைல் துறையில் பெரிதாக கால் பதிக்க முடியாவிட்டாலும் கணினி துறையில் விண்டோஸ் ஓ.எஸ்ஸின் முதலாளியான மைக்ரோசாப்ட்தான் பெரிய ஆள் என கூறலாம்.
கணினி கேமர்களை கவரும் வகையில் மைக்ரோசாஃப்ட் எக்ஸ் பாக்ஸ் என்னும் சாஃப்ட்வேரை வெளியிட்டுள்ளது. இதில் கேம்களை வாங்கியோ வாடகைக்கு எடுத்தோ விளையாடி கொள்ளலாம். இதில் உள்ள முக்கால்வாசி கேம்களுக்கு ஜாய் ஸ்டிக் சப்போர்ட் உண்டு என்பது கூடுதல் சிறப்பு.
மேலும் சோனியின் ப்ளேஸ்டேஷன் போலவே மைக்ரோசாப்ட்டும் கேம் விளையாட எக்ஸ் பாக்ஸ் சாதனத்தை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் இதுவரை கணினி கேம்களில் மூக்கை நுழைக்காத கூகுள் நிறுவனம் தற்சமயம் ஆண்ட்ராய்டில் உள்ள கூகுள் ப்ளேவை கணினிக்கு அறிமுகம் செய்துள்ளது.
210 நாடுகளில் தற்சமயம் கூகுள் ப்ளே கேம்ஸ் கணினிகளுக்காக வெளியாகியுள்ளது. இதில் குறிப்பிட்ட சில பிரபலமான ஆண்ட்ராய்டு கேம்களை கணினிக்கு சப்போர்ட் ஆகும் வகையில் மாற்றி அமைத்துள்ளனர். இன்னும் ப்ரீ பயர் போன்ற விளையாட்டுகள் இதில் இடம் பெறவில்லை என்றாலும் கூட எதிர்காலத்தில் அவை வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கணினி கேம் மார்க்கெட்டை பிடித்து வந்த எக்ஸ் பாக்ஸ், ஸ்டீம் போன்ற நிறுவனங்களுக்கு இது பின்னடைவை ஏற்படுத்தலாம் என பேச்சுக்கள் உள்ளன.
