News
பிக்பாஸ் வீட்டில் நடந்த அந்த சம்பவம்! அலறிய ஜி.பி.முத்து! – அதிர்ச்சியில் போட்டியாளர்கள்!
விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி நடந்து வரும் நிலையில் நேற்று நடந்த சம்பவம் வைரலாகியுள்ளது.
விஜய் டிவியில் பிக்பாஸ் 6வது சீசன் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. இரண்டாம் நாளான நேற்று 4 டீம்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்குகளை செய்வதில் கவனமாக இருந்தனர். சமையல் டீமிடம் அமுதவாணன், அசல் உள்ளிட்டோர் ஊட்டி விட்டால்தான் சாப்பிடுவோம் என குறும்புத்தனம் செய்துக் கொண்டிருந்தனர்.

கடைசியாக பிக்பாஸ் ஒரு புது போட்டியை வைத்தார். அதில் அங்கு வைக்கப்பட்டிருந்த மைக்கில் அதிக சத்தமாக கத்த வேண்டும். அதில் யார் அதிக டெசிபலுக்கு கத்துகிறார்களோ அவர்களுக்கு பாயிண்ட் வழங்கப்படும். முதலாவதாக அசீம் கத்தியபோது தொழில்நுட்ப கோளாறு காரணமாக அது வொர்க் ஆகவில்லை.
அதனால் அசீமை மீண்டும் கத்த சொல்லி பிக்பாஸ் கேட்டார். ஆனால் தொண்டை பிரச்சினையாகிவிட்டதாக அசீம் மறுத்து விட்டார். பின்னர் ஜி.பி.முத்து வந்து கத்திய கத்தலில் சக போட்டியாளர்கள் அதிர்ந்தனர். ஜி.பி.முத்து டீமுக்கு 1.5 பாயிண்டுகள் கிடைத்தது. ஆனால் மற்றவர்கள் எவ்வளவு கத்தியும் 1.2 பாயிண்டுக்கு மேல் எடுக்க முடியவில்லை.
அந்த சமயம் அஸீமுக்கு மட்டும் இரண்டு முறை கத்த வாய்ப்பளித்தது குறித்து எதிர் டீம் பிரச்சினையில் இறங்கவே ஜி.பி.முத்து உள்ளிட்டோர் அது டெக்னிக்கல் பிரச்சினையால் வழங்கப்பட்ட மறுவாய்ப்பு அதற்காக எல்லாருக்கும் வாய்ப்பு தர முடியாது என மறுத்து பேசினர். இதனால் தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் குழப்பம், கூச்சல் ஏற்பட்டுள்ளது.
