தலைவரான ஜி.பி.முத்து.. இனிமேதான் இருக்கு கச்சேரி! – பிக்பாஸ் சீசன் 6!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பிரபலம் ஜி.பி.முத்து தற்போது பிக்பாஸ் வீட்டின் தலைவராகவும் ஆகியுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அசல், ஆயிஷா என பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ள நிலையில் முதல்வாரமே பரபரப்பாக இருந்தது.

முன்னதாக வாஷிங் டீமில் இருந்த ஜி.பி.முத்துவின் செயல்கள் அதே டீமில் இருந்த ஆயிஷாவுக்கும், தனலெட்சுமிக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அந்த சமயம் டீம் லீடராக இருந்த ஜனனி முதலில் ஜி.பி.முத்துவை வெளியே அனுப்பினாலும் பின்னர் ஸ்வாப் செய்து கொண்டார்.

ஜி.பி.முத்துவின் இந்த சண்டை குறித்து கமல்ஹாசன் விசாரிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கமல்ஹாசன் ஜி.பி.முத்துவுடன் ஜாலியாக மட்டுமே பேசினார். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் ஜி.பி.முத்து பிக்பாஸ் வீட்டிற்கு தலைவராக ஆகிவிட்டதாக தெரிகிறது.

பலரும் தலைவரே.. தலைவரே என ஜி.பி.முத்து பின்னாலேயே சுற்றிக் கொண்டிருக்கின்றனர். தலைவராக தனக்கு வரும் டாஸ்க்குகளை சமாளிப்பாரா என அவரது ஆதரவாளர்களும் தீவிரமாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்

Refresh