ஹாலிவுட்டில் புதிய பினாக்கியோ ! – இதை விட யாரும் சிறப்பா எடுத்திட முடியாது?

ஹாலிவுட்டில் எப்போதுமே அனிமேஷன் திரைப்படங்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. ஹாலிவுட்டில் பெரும் இயக்குனர்களான ஜேம்ஸ் கேமரூன், ஸ்டீபன் ஸ்பீல்பர்க் போன்ற இயக்குனர்கள் கூட அனிமேஷன் படங்களை இயக்கியுள்ளனர்.

அந்த வகையில் ஹாலிவுட்டின் பிரபல இயக்குனரான குலிரமோ டெல்டோரோ பல படங்களை இயக்கியுள்ளார். அதில் தற்சமயம் பெரும் வரவேற்பை பெற்ற படம் பினாக்கியோ.

பல காலங்களாகவே ஹாலிவுட்டில் பினாக்கியோ என்கிற ஃபேரி டேல் கதை படமாக்கப்பட்டு வந்துள்ளது. அதில் சிறப்பானதொரு திரைப்படமாக தற்சமயம் வெளியான பினாக்கியோ அமைந்துள்ளது.

ஸ்டாப் மோஷன் அனிமேஷன் என்ற அனிமேஷன் தொழில்நுட்பத்தில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

இத்தாலியில் நடக்கும் போரின் காரணமாக தனது மகனை இழக்கிறார் கெபாட்டோ. எனவே தனது தனிமையை போக்கி கொள்ள தனது மகன் போன்ற ஒரு பொம்மையை உருவாக்குகிறார். அந்த பொம்மை உயிர் பெறுகிறது அதுதான் பினாக்கியோ.

இதனுடன் சபாஷ்டியன் என்ற வெட்டுக்கிளி போன்றவர்களை முக்கிய கதை மாந்தர்களாக கொண்டு படம் செல்கிறது. போரின் கொடுமையான முகம், அன்பின் தேவை என பல பெரும் விவாதங்களை அனிமேஷன் படத்தின் வழியே ஏற்படுத்தியிருப்பது படத்தின் சிறப்பான விஷயமாக உள்ளது.

பினாக்கியோ மிகவும் சுட்டியான ஒரு சிறுவனாக இருக்கிறான். அவன் இறந்த தனது மகன் போல சமர்த்தான பையனாக இருக்க வேண்டும் என நினைக்கிறார் கெபாட்டோ. இதனால் இருவருக்கும் இடையே மன கசப்பு ஏற்பட்டு அவரை விட்டு பிரிந்து ஒரு சர்க்கஸ் நிறுவனத்தில் சேருகிறான் பினாக்கியோ. பிறகு பல போராட்டங்களுக்கு இடையில் அவர்கள் எப்படி ஒன்றினைக்கிறார்கள் என்பதே கதை.

இதற்கு முன்னர் வந்த பினாக்கியோ படத்தை விடவும் இந்த திரைப்படம் பல விஷயங்களை பேசியுள்ளது. நெட்ப்ளிக்ஸ் தளத்தில் இந்த படம் தமிழில் கிடைக்கிறது.

படத்தின் ட்ரைலரை காண இங்கு க்ளிக் செய்யவும்

Refresh