தூங்கிக்கிட்டு இருந்த என்னை எழுப்பி வேலை வாங்குனார் – மணிரத்னம் மீது குற்றம் சாட்டிய வைரமுத்து

தமிழ் சினிமாவில் சில பிரபலங்கள் காம்போவாக செய்யும் விஷயங்கள் மக்களிடையே எப்போதும் வரவேற்பை பெற்று வரும். உதாரணமாக கூற வேண்டும் என்றால் செல்வராகவன், யுவன் சங்கர் ராஜா காம்போ. செந்தில், கவுண்டமணி காம்போ..

அப்படி ஒரு முக்கியமான காம்போவாக தமிழ் சினிமாவில் இருந்ததுதான் ரஹ்மான், மணிரத்னம், வைரமுத்து காம்போ. பல காலங்களாக இந்த கூட்டணி தமிழ் சினிமாவில் வெற்றி வாகை சூடி வந்துள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு கூட வைரமுத்து பாடல் வரிகள் எழுதி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என சிலர் பேசுவதுண்டு.

அலைபாயுதே படத்தில் பணிப்புரிந்தது குறித்து வைரமுத்து ஒருமுறை ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அந்த சமயத்தில்  யாரோ யாரோடி உன்னோட புருசன் என்கிற பாடலுக்கான வரிகளை தயாரித்து இருந்தாராம் வைரமுத்து. அந்த பாடலை பாட வெளி மாநிலத்தில் இருந்து ஆட்களை வரவழைத்திருந்தாராம் மணிரத்னம்.

அவர்கள் வருவதற்கு தாமாதமானதால் இரவு 11 மணிப்போல்தான் ரெக்கார்டிங் துவங்கியதாம். இந்நிலையில் யாரோ யாரோடி உன்னோட புருசன் என்கிற வரி இருமுறை வருமாறு பாடல் இருந்ததாம். இது மணிரத்னத்திற்கு நெருடலாக இருக்கவே இரவு 12 மணி அளவில் அவர் வைரமுத்துவிற்கு போன் செய்தாராம்.

ஒரே வரி இருமுறை வருவது நெருடலாக உள்ளது. எனவே இரண்டாவது முறைக்கு மாற்று வரி அமைத்து தருமாறு மணிசார் வைரமுத்துவை கேட்டுள்ளார். அரை தூக்கத்தில் இருந்த வைரமுத்து அப்போதும் யோசித்து யாரோ யாரோடி உன் திமிறுக்கு அரசன் என ஒரு வரியை கூறினாராம். அது மணிரத்னத்திற்கு ஏற்புடையதாக இருந்ததாம்.

பிறகு பாடலிலும் கூட இந்த வரியை சேர்த்தே பாடல் உருவானதாம். அப்படியெல்லாம் பாடலை குடுத்த வைரமுத்து, பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இல்லாமல் போனது ஒரு வருத்தமான விஷயமே.

Refresh