என்னை கேள்வி கேட்குறவனுக்கு எவ்வளவு கர்வம் இருக்கணும்..? விமர்சகர்களை வைத்து செய்த இளையராஜா.!

தமிழ் சினிமாவில் எல்லா காலங்களிலும் அதிக மதிப்பு வாய்ந்த இசையமைப்பாளராக பார்க்கப்படுபவர் இளையராஜா. ஒரு காலக்கட்டத்தில் இளையராஜாவின் பாடல்களுக்கு அதிக மதிப்பு என்பது இருந்தது. நிறைய படங்களில் படக்கதைகள் அவ்வளவு சிறப்பாக இல்லை என்றாலும் கூட இளையராஜாவின் பாடல்கள் அதில் சிறப்பாக இருக்கும்.

அந்த பாடல்களுக்காகவே திரைப்படங்கள் ஓடிய காலக்கட்டம் ஒன்று இருந்தது. இந்த நிலையில் இயக்குனர்கள் மலை போல இளையராஜாவின் பாடலை நம்ப துவங்கினர். தொடர்ந்து இளையராஜாவுக்கும் அதிக வாய்ப்புகள் வந்துக்கொண்டே இருந்தன.

ஆனால் இப்போது எவ்வளவோ புது இசையமைப்பாளர்கள் வந்துவிட்டனர். அவர்கள்தான் இப்போது தமிழ் சினிமாவின் முக்கிய இசையமைப்பாளராக இருக்கின்றனர். இளையராஜாவுக்கு இப்போது அந்த அளவிற்கு வாய்ப்புகள் என்பது இல்லை.

ilayaraja
ilayaraja
Social Media Bar

இந்த நிலையில் எப்போதுமே இளையராஜாவை கர்வம் பிடித்தவர் என கூறும் ஒரு கூட்டமுண்டு. அந்த கூட்டத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இளையராஜா சமீபத்தில் பேசியிருந்தார். அதில் இளையராஜா பேசும்போது எனது பாட்டுக்காக திரைப்படங்கள் ஓடிய காலக்கட்டம் உண்டு.

அந்த அளவிற்கு மதிப்பு வாய்ந்தவான இருந்த நான் கர்வமாக இருப்பதில் என்ன தவறு என கேட்டிருந்தார். மேலும் அவர் கூறும்போது என்னை கர்வம் பிடித்தவன் என கூறுகின்றனர். நான் கர்வம் பிடித்தவன் என்றால் என்னை அப்படி சொல்பவன் எவ்வளவு கர்வம் பிடித்தவனாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார் இளையராஜா.