News
விஜய் நல்லவிதமாதான் பேசி இருக்கார்.. ஆதரவாக பேசிய உதயநிதி..!
நடிகர் விஜய் அரசியலுக்கு வருகிறேன் என அறிவித்த சில மாதங்களிலேயே கட்சியை துவங்கிவிட்டார். தமிழக வெற்றி கழகம் என்கிற தன்னுடைய கட்சிக்கான கொடியை அறிவித்தார் விஜய். அதில் இருந்து விஜய் மீது மக்களின் எதிர்பார்ப்பு என்பது அதிகரித்து வருகிறது.
அரசியலுக்கு வருகிற காரணத்தால் முற்றிலுமாக சினிமாவில் இருந்து விலக இருக்கிறார் விஜய். இந்த நிலையில் விஜய்யின் கொள்கைகள் என்பது தமிழ் தேசியம் மற்றும் திராவிடம் கருத்துகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. இந்த நிலையில் தொடர்ந்து திமுக விற்கு எதிராகதான் விஜய் அதிகமாக பேசி வருகிறார்.
கட்சி மாநாடு துவங்கியதில் இருந்தே விஜய்யின் பேச்சுக்கள் அதிகப்பட்சம் ஆளுங்கட்சியை தாக்கும் விதமாகதான் இருந்து வருகிறது. இந்த நிலையில் விஜய் என்ன பேசினாலும் அதுக்குறித்து தி.மு.கவிடம் கருத்து கேட்பதை பத்திரிக்கையாளர்கள் வேலையாக வைத்துள்ளனர்.
இந்த நிலையில் சமீபத்தில் விஜய் பேசியது குறித்து உதயநிதியிடம் கேள்வி கேட்கப்பட்டது. விஜய் ஓட்டுக்கு பணம் வாங்காமல் நேர்மையாக வாக்களிக்க சொல்கிறார் அது பற்றி உங்கள் கருத்து என்ன என கேட்டனர். அதற்கு பதிலளித்த உதயநிதி அவர் சரியாகதானே சொல்லி இருக்கார். அதுப்பற்றி உங்களுக்கு ஏதும் பிரச்சனையா? என கேட்டார்.
பிறகு பத்திரிக்கையாளர்கள் விஜய் அரசியலுக்கு வந்தது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என கேட்டனர். அதற்கு பதிலளித்த உதயநிதி இங்கு யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். எல்லோருக்கும் அதற்கு உரிமை உள்ளது என பதிலளித்திருந்தார்.
