Actress
வாய்ப்புகள் இல்லாததால் வாரிசு நடிகை எடுத்த முடிவு..! இவங்களுக்கு இந்த நிலையா?.
தமிழ் சினிமாவில் நிறைய வாரிசு நடிகைகள் அறிமுகமாகின்றனர். ஆனால் எல்லா நடிகைகளுக்கும் அவ்வளவாக வரவேற்பு கிடைத்து விடுவதில்லை. சில நடிகைகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் கூட ஏனோ வாய்ப்புகள் கிடைப்பதில்லை.
நடிகை ஸ்ரீ திவ்யா போன்ற நடிகைகள் இப்படியாக மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தும் கூட வரவேற்பு கிடைக்காமல் காணாமல் போய்விட்டனர். அந்த வரிசையில் மிக பிரபலமாக இருந்தவர்தான் நடிகை தன்யா ரவிச்சந்திரன். இவர் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி ஆவார்.
2016 ஆம் ஆண்டு பலே வெள்ளையதேவா என்கிற திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் நடித்த பிருந்தாவனம், கருப்பன் மாதிரியான படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
முக்கியமாக கருப்பன் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார் தன்யா, அதற்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகளும் அதிகமாக கிடைத்தது.
ஆனால் அவர் நல்ல கதைகளங்களாக தேர்ந்தேடுங்காத காரணத்தால் அவர் நடித்த திரைப்படங்கள் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. தமிழில் அவர் நடித்த மாயோன், ட்ரிக்கர், அகிலன், ரசவாதி போன்ற படங்கள் எதுவும் வரவேற்பை பெறவில்லை.
இதனை தொடர்ந்து தன்யாவிற்கு வாய்ப்புகள் குறைந்தது. இவ்வளவு நாட்களும் திரையில் கூட கவர்ச்சி காட்டாத தன்யா தற்சமயம் வாய்ப்புகளுக்காக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் அதிக ட்ரெண்டாகி வருகிறது.
