நாசர் சொன்ன அந்த வார்த்தை டயலாக் பேப்பரை கிழித்து போட்ட மிஸ்கின்.. இதுதான் காரணம்.!

தமிழில் தொடர்ந்து மாறுபட்ட கதை அம்சங்களை தேர்ந்தெடுத்து இயக்கும் இயக்குனராக இயக்குனர் மிஷ்கின் இருந்து வருகிறார். சமீப காலங்களாக இயக்குனர் மிஷ்கினின் இயக்கத்தில் பெரிதாக திரைப்படங்கள் என்று எதுவும் வெளிவரவில்லை.

ஏனெனில் திரைப்படங்களை இயக்குவதை காட்டிலும் இப்பொழுது படங்களில் நடிப்பதன் மீது அதிக ஆர்வம் காட்டி வருகிறார் மிஷ்கின். மேலும் விஜய் டிவியில் வெளியாகி இருக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளும் நடுவராக கலந்து கொண்டு தற்சமயம் அதிக பிரபலமடைந்து வருகிறார் மிஷ்கின்.

இதற்கு நடுவே அவர் திரைப்படங்களை இயக்கி வருவதும் உண்டு. முன்பு அவர் திரைப்படம் இயக்கிய போது நடந்த சுவாரசியமான அனுபவங்களை ஒரு பேட்டியில் பகிர்ந்து இருந்தார் மிஸ்கின். அதில் அவர் கூறும்போது ஒரு முறை நாசருக்கு இரண்டரை பக்கத்திற்கு உள்ள டயலாக்கை எழுதி கொடுத்தேன். 

Social Media Bar

அதை முழுதாக படித்த நாசர் என்னிடம் வந்து இந்த டயலாக்குகளை படிக்காமல் முகத்தின் மூலம் உணர்ச்சிகளாக வெளிப்படுத்தவா என்று என்னிடம் கேட்டார். எனக்கு அது மிக ஆச்சரியமாக இருந்தது.

ஏனெனில் நாசர் ஒரு மூத்த நடிகர் ஆவார். அவர் மீது எனக்கு முழு நம்பிக்கை உண்டு. எனவே நான் அந்த டயலாக் பேப்பரை எடுத்து கிழித்து போட்டு விட்டேன்.

சார் உங்களுக்கு தோன்றுகிற படி செய்யுங்கள் என்று கூறினேன் ஏனெனில் வார்த்தைகளை விட உணர்வுகள் என்பதே பெரிய விஷயம் அதனால்தான் எனது திரைப்படங்களில் வசனங்கள் அதிகமாக இருக்காது என்று கூறியிருக்கிறார் மிஷ்கின்.