கூச்சமே இல்லாமல் அதை காட்டிய ரசிகை!. புருஷன் காலில் விழணும்.. ஓப்பன் டாக் கொடுத்த மைக் மோகன்!.
தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் தனக்கான ஒரு தனி ரசிகர் கூட்டத்தை வைத்துக் கொண்டவர் என்றால் அது மைக் மோகன். இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்து கொண்டிருந்த மைக் மோகன் திடீரென்று சினிமாவிலிருந்து காணாமல் போய்விட்டார்.
புதுமுக நடிகர்கள் வர வர மைக் மோகன் சினிமாவில் இருந்து காணாமல் போய்விட்டார். ஆனால் இவரின் நடிப்பு பெரும்பாலான பெண் ரசிகைகளை ஈர்த்தது என்று தான் கூற வேண்டும். அந்த வகையில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கும் மைக் மோகன் ஒரு பேட்டி ஒன்றில் அவரின் ரசிகை ஒருவர் செய்த செயலை பற்றி பகிர்ந்து இருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் மைக் மோகன்
நடிகர் மைக் மோகன் நடித்த பயணங்கள் முடிவதில்லை என்ற திரைப்படம் மக்களை அதிக அளவில் கவர்ந்தது. இதனால் அவருக்கு ரசிகர் பட்டாளம் அதிக அளவு சேர்ந்தார்கள். இவர் நடித்த பெரும்பாலான படங்களில் பாடகராக நடித்திருப்பார். இவர் எப்பொழுதும் கையில் மைக் வைத்துக் கொண்டு தான் நடிப்பார். இதனாலையே இவரை அனைவரும் மைக் மோகன் என்று அழைத்தார்கள்.

மேலும் இவ்வாறு இவர் பாடகராக நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்ததால் செண்டிமெண்டாக பல படங்களில் இது போன்ற கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார்.
அதன் பிறகு இவர் நடித்த மௌன ராகம் திரைப்படம் இவருக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது என்று கூற வேண்டும். அந்த திரைப்படம் வெளியாகி அதிகமான ரசிகர்களை இவர் பக்கம் ஈர்த்தது. இந்நிலையில் சில காரணங்களால் மைக் மோகன் சினிமாவை விட்டு விலகிய பிறகு மீண்டும் வெங்கட் பிரபு இயக்கும் திரைப்படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார்.
பெண் ரசிகை செய்த சம்பவம்
தற்போது மைக் மோகன் தளபதி விஜய் நடிக்கும் கோட் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பல வருடங்கள் கழித்து சினிமாவில் நடிக்கும் மைக்மோகனை பார்ப்பதற்கு அவரின் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளார்கள்.
கோட் படத்திற்கு பிறகு மைக் மோகன் பல படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரின் ரசிகை செய்த செயலை பகிர்ந்து இருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அவர் கூறும்போது தன்னை சந்திப்பதற்காக ஒரு பெண் ரசிகை ஒருவர் வந்திருந்தார். அவரை நான் சந்திக்கும்போது அந்த ரசிகை அவரது தாலியை எடுத்து என்னிடம் காட்டினார். அந்த தாலியில் என்னுடைய புகைப்படம் இருந்தது. அதை பார்த்ததும் எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது.

நான் அவரிடம் என்னம்மா என்னுடைய புகைப்படத்தை உன் தாலியில் வைத்திருக்கிறாய் என கேட்டேன். அதற்கு அந்தப் பெண் ரசிகை உங்களை எனக்கு இளம் வயதில் இருந்தே பிடிக்கும். அதனால் தான் நான் இவ்வாறு செய்தேன். இது குறித்து என்னுடைய கணவரும் எதுவும் கூறவில்லை. எனவே இதை நான் பத்திரமாக அப்படியே வைத்திருக்கிறேன் என கூறினார்.
இதைக் கேட்டதும் நான் மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். மேலும் அந்தப் பெண்ணின் கணவரை பார்த்தால் நான் காலில் விழ வேண்டும். இது போன்ற ரசிகைகள், ரசிகர்கள் எனக்கு கிடைத்திருப்பது மிகப்பெரிய வரம் எனக் கூறியிருக்கிறார்.