ரஞ்சிதமே பாடலுக்கு தடை விதிக்க வேண்டும்?, ஆபாச வரிகள் இடம்பெற்றுள்ளது.! – குவியும் எதிர்ப்புகள்

விஜய் நடித்து மாபெரும் எதிர்ப்பார்ப்புடன் வெளியாகவிருக்கும் திரைப்படம் வாரிசு. இந்த படம் அஜித் நடிக்கும் துணிவு திரைப்படத்துடன் சேர்ந்து வெளியாக இருப்பதால் திரை துறையில் ஒரு போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவு செய்யும் விதமாக ரஞ்சிதமே ரஞ்சிதமே என்கிற ஒரு பாடலை முதல் சிங்கிள் ட்ராக்காக வெளியிட்டது படக்குழு.

இந்த பாடலுக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்திருந்தார். விஜய் இந்த பாடலை பாடியிருந்தார். இந்த நிலையில் இந்த பாடலில் ஆபாச வரிகள் இடம் பெற்றுள்ளதால் இந்த பாடலுக்கு தடை விதிக்க வேண்டும் என ஒரு சாரார் விவாதம் செய்து வருகின்றனர்.

அந்த பாடலில் “உச்சி கொட்டும் நேரத்தில் உச்சக்கட்டம் தொட்டவளே” என்று ஒரு வரி வருகிறது. அந்த வரி தவறான அர்த்தத்தை கொண்டுள்ளது என்றும், சிறுவர்கள் முதல் அனைவரும் வரியின் அர்த்தம் தெரியாமல் அதை பாடுவதற்கு வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகிறது.

இதனால் இந்த பாடலுக்கு தொடர்ந்து எதிர்ப்புகள் அதிகரித்து வருகிறது.

Follow @ Google News: சினிபேட்டையில் வரும் அனைத்து சினிமா அப்டேட்களையும் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிபேட்டை தளத்தை ஃபாலோ செய்யவும்.

Refresh