Tamil Cinema News
வயசான கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா? ஜன நாயகன் படத்தில் இதை கவனிக்கலையே..!
நேற்று விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் ஜனநாயகன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. விஜய் நடித்து வரும் ஜனநாயகன் திரைப்படத்திற்கு அதிகமான வரவேற்பு என்பது இருந்து வருகிறது.
ஏனெனில் விஜய் நடிக்கும் இறுதி படமாக ஜனநாயகன் திரைப்படம் இருக்கிறது. இந்த படத்திற்கு பிறகு விஜய் முழுமையாக சினிமாவை விட்டு விலகி அரசியலில் ஆர்வம் காட்ட இருக்கிறார்.
இந்த நிலையில் ஜனநாயகன் திரைப்படத்தை இயக்குனர் ஹெச். வினோத் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்ட காலத்தில் இருந்தே தெலுங்கில் வெளியான பகவந்த் கேசரி என்கிற பாலகிருஷ்ணா திரைப்படத்தின் தழுவல்தான் ஜனநாயகன் என பேச்சுக்கள் இருந்து வந்தன.
இந்த நிலையில் தற்சமயம் இளம் போலீஸாக ஃபர்ஸ்ட் லுக்கில் விஜய் வந்துள்ளார். ஆனால் பகவந்த் கேசரியில் பாலகிருஷ்ணா வயதான கதாபாத்திரமாகதான் வருவார் என ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்தன.
ஆனால் பகவந்த் கேசரி திரைப்படத்தில் ஃப்ளாஸ் பேக் கதையில் பாலகிருஷ்ணா போலீசாக வரும் காட்சிகள் இடம் பெற்றிருக்கும். அதுதான் ஜனநாயகனிலும் வந்துள்ளது என ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன.
