தெலுங்கில் வேண்டாம் என மறுத்து தமிழில் ஹிட் அடித்த பாடல்?

எப்போதும் இசையமைப்பாளர்கள் இசையமைக்கும் அனைத்து பாடல்களுமே திரையில் வருவதில்லை. பல பாடல்கள் தயாரிப்பாளருக்கு, இயக்குனருக்கு பிடிக்காத காரணத்தால் வெளிவராமல் இருந்ததுண்டு.

அப்படி ஒரு இயக்குனரால் நிராகரிக்கப்படும் பாடல் வேறொரு படத்தில் வெளியாகி ஹிட் அடிக்கும் நிகழ்வுகளும் சினிமாவில் நடந்துள்ளன. தமிழில் பிரபலமான இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனுக்கும் கூட இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.

2008 காலக்கட்டத்தில் இவர் தெலுங்கில் ஒரு படத்திற்கு இசையமைத்து கொடுத்துக்கொண்டிருந்தார். அப்போது அந்த படத்தின் இயக்குனர் படத்தில் ஒரு ஐட்டம் சாங் வேண்டும் என கேட்டுள்ளார்.

இசையமைப்பாளரும் ஒரு பாடலை உருவாக்கியுள்ளார். ஆனால் அதை கேட்ட தயாரிப்பாளர் இந்த பாடல் ஏதோ பிச்சைக்காரர்கள் பாடும் பாடல் போல உள்ளது. இது வேண்டாம் என நிராகரித்துள்ளனர். பிறகு அவர்கள் கேட்டது போன்ற பாடலை அவர்களுக்கு போட்டு கொடுத்தார் ஜேம்ஸ் வசந்தன்.

இதன் பிறகு ஒருமுறை இயக்குமர் எம்.சசிகுமாரை சந்திக்கும்போது அந்த பாடலை அவருக்கு போட்டுக்காட்டியுள்ளார் ஜேம்ஸ் வசந்தன். அதை கேட்ட சசிக்குமார், “பாடல் நன்றாக உள்ளது. இந்த பாடலை எனக்கு தாருங்கள், எனது படத்தில் உபயோகப்படுத்திக்கொள்கிறேன்” என கூறி வாங்கி சென்றுள்ளார்.

2010 ஆம் ஆண்டு வெளிவந்த ஈசன் படத்தில் வந்தானமா வந்தனம் என்ற என்று அந்த பாடல் இடம் பெற்றது.

அந்த பாடல் வந்த காலத்தில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்த ஒரு பாடலாக அது இருந்தது.

Refresh