ரோபாவா ? பேயா? – பிரபல ஹாரர் இயக்குனரின் மர்ம திரைப்படம்

ஹாலிவுட்டில் ஹாரர் படங்கள் எடுப்பதற்கு பெயர் பெற்ற இயக்குனர்தான் ஜேம்ஸ் வான். 

இவர் இயக்கிய கான்ஜூருங், இன்சிடியஸ் போன்ற திரைப்படங்கள் ஹாலிவுட்டில் மட்டுமின்றி தமிழிலும் கூட மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படங்கள். 

அடுத்து அவர் தயாரித்து வரவிருக்கும் திரைப்படம்தான் மேகன் (Megan) என்கிற திரைப்படம். குழந்தைகளுக்கு தோழியாகவும், ஆதரவாகவும் இருக்க ஒரு ரோபோவை உருவாக்குகிறார் ஒரு விஞ்ஞானி.

சிறுமிக்கு ஆதரவாக வரும் அந்த ரோபோ, சில சமயங்களில் மர்மமாக நடந்து கொள்கிறது. போக போக அதன் நடவடிக்கைகள் வினோதமாக இருக்கிறது.

இந்நிலையில் ரோபோவிடமிருந்து அந்த குழந்தை எப்படி ரோபோவிடமிருந்து தப்பிக்கிறது. அந்த ரோபோ என்னவாக போகிறது என்பதெல்லாம் கொண்டு சுவாரஸ்யமாக செல்கிறது கதை.

Refresh