ஜான்விக் நான்காம் பாகத்தின் ட்ரைலர் வெளியானது.! – இனி சண்டைக்கு பஞ்சம் இருக்காது.

ஹாலிவுட் திரையுலகில் கேனு ரீவஸ் மிகவும் புகழ்பெற்ற ஒரு நடிகர் ஆவார். அவர் நடித்த பல படங்கள் ஹாலிவுட்டில் ஹிட் கொடுத்துள்ளது.

ஏற்கனவே எண்டர் தி மேட்ரிக்ஸ் என்கிற திரைப்படத்தின் இவர் கதாநாயகனாக நடித்திருந்தார். அது மூன்று பாகங்கள் வெற்றிகரமாக ஹிட் அடித்த பிறகு சில மாதங்களுக்கு முன்பு அதன் நான்காம் பாகம் வெளியானது.

அதே போல மற்றுமொரு ஹிட் அடித்த சீரிஸ்தான் ஜான்விக், ஜான்விக் ஒரு ஆண்டிஹீரோ கதையாகும். ரவுடியாக இருந்த கதாநாயகன் அந்த தொழிலை விட்டு ஒரு நாயை வளர்த்து கொண்டு வாழ்ந்து வருவான், அந்த நேரத்தில் ஒரு குழு அவனது நாயை கொன்று அவனை தாக்கிவிட்டு செல்ல, அவர்களை பழிவாங்க ஜான்விக் கிளம்புவார்.

இப்படியாக துவங்கிய முதல்பாகம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. எனவே தொடர்ந்து மூன்று பாகங்கள் எடுக்கப்பட்டது. தற்சமயம் அந்த படத்தின் நான்காம் பாகத்திற்கான தமிழ் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

ட்ரைலரை காண இங்கு க்ளிக் செய்யவும்.

Refresh