கலக தலைவன் திரைப்படம் – முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

தமிழின் மிகப்பெரும் தயாரிப்புகளில் முக்கியமானவர் உதயநிதி. இவர் தமிழில் பல படங்களை வாங்கி வெளியிடுவதை முக்கிய பணியாக கொண்டுள்ளார். அதே சமயம் தமிழில் பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

ஆனாலும் அரசியலில் ஈடுப்பட்டு வருவதால் தமிழில் உதயநிதியால் அதிக படங்களில் நடிக்க முடிவத்தில்லை. இருந்து அவ்வபோது படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடித்து வெளியான திரைப்படம் நெஞ்சுக்கு நீதி. ஆர்ட்டிக்கிள் 15 என்ற ஹிந்தி படத்தின் கதையை கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டது.

நெஞ்சுக்கு நீதி திரைப்படமானது ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றது. எனவே தொடர்ந்து அவர் நடித்த கலக தலைவன் திரைப்படமும் நேற்று வெளியானது. இந்த படமும் கூட சமூக நீதியை பேசும் படமாக இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து நகைச்சுவை படங்களில் நடித்து வந்த உதயநிதி தற்சமயம் அதிலிருந்து விலகி வித்தியாசமான கதைகளை கொண்ட படங்களில் நடித்து வருகிறார். நேற்று ஒரு நாள் மட்டும் தமிழ்நாடு முழுவதும் 2 கோடி ரூபாய்க்கு ஓடியுள்ளது கலக தலைவன் திரைப்படம்.

உதயநிதியின் மற்ற திரைப்படங்களோடு ஒப்பிடும்போது இது ஒரு டீசண்டான வசூல்தான் என கூறப்படுகிறது.

Refresh