சரியான வெக்கங்கெட்ட நடிகன்யா நீ! – கமலை பார்த்து கலாய்த்த பாலச்சந்தர்!

Cinema History News Tamil Cinema News

தமிழில் பிரபலமான நடிகர்களில் முக்கியமானவர் கமல்ஹாசன். தமிழ் சினிமாவில் சிறப்பான நடிகர்களில் கண்டிப்பாக கமல்ஹாசனுக்கு முக்கியமான இடம் இருக்கும். கமல்ஹாசனுக்கு அவரது சினிமா வாழ்க்கையில் முக்கியமான திரைப்படமாக அமைந்த திரைப்படம் 16 வயதினிலே.

அந்த திரைப்படத்தில் சப்பானி என்கிற தனித்துவமான கதாபாத்திரத்தில் கமல் நடித்திருந்தார். படம் வெளியான பிறகு சப்பானி கதாபாத்திரம் வெகுவாக பேசப்பட்டது.

அந்த திரைப்படத்தில் கமலின் நடிப்பை பார்த்த இயக்குனர் பாலச்சந்தர் அதற்காக பலமுறை வெகுவாக பாராட்டியுள்ளார். முக்கியமாக அந்த படத்தில் ஒரு காட்சியில் கமல் கோவணத்தோடு நடிக்க வேண்டிய காட்சி இருந்தது.

அப்படி நடிக்க கமல் ஒப்புக்கொள்வாரா? என யோசித்தவாரே கமலிடம் தயக்கத்துடன் கேட்டுள்ளார் பாலச்சந்தர். அதை கேட்ட கமல்ஹாசன் உடனே சென்று ஆடைகளை களைந்துவிட்டு கோவணத்தோடு வந்து நின்றார்.

அதை பார்த்த பாலச்சந்தர் சிரித்துக்கொண்டே “சரியான வெக்கங்கெட்ட நடிகன்யா நீ” என கமல்ஹாசனை கலாய்த்துள்ளார். கமல் இந்த சுவையான அனுபவத்தை தனது பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.