Connect with us

100 ரூபா கூட காசா கைல வாங்கல!. இயக்குனருக்கு பெரும் லாபத்தை பெற்று கொடுத்த கமல்ஹாசன்!..

kamalhaasan

Cinema History

100 ரூபா கூட காசா கைல வாங்கல!. இயக்குனருக்கு பெரும் லாபத்தை பெற்று கொடுத்த கமல்ஹாசன்!..

cinepettai.com cinepettai.com

Kamalhaasan: குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி தற்சமயம் பெரும் நடிகராக இருந்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். களத்தூர் கண்ணம்மா திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான கமல்ஹாசன் இவ்வளவு பெரிய வெற்றி நாயகனாக மாறுவார் என்பது அப்போது இருந்த நடிகர்களே எதிர்பார்க்காத விஷயம் ஆகும்.

ஏ.வி.எம் சரவணனே ஒருமுறை பேட்டியில் கூறும்போது கமல்ஹாசன் இவ்வளவு திறமைகள் கொண்டவர் என அப்போது எனக்கு தெரியாது என்றே கூறியிருந்தார். இந்த நிலையில் நிறைய வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும் கூட கமல்ஹாசனின் திரைப்படங்களில் காமெடி திரைப்படங்கள் தனித்துவமானவை.

Kamal_haasan
Kamal_haasan

மைக்கேல் மதன காமராஜன், தெனாலி, அபூர்வ சகோதரர்கள், அவ்வை சண்முகி, பஞ்ச தந்திரம் இப்படி அவர் காமெடியாக நடித்த படங்கள் ஏராளம். அவை யாவும் எப்போதுமே மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற திரைப்படங்களாக இருக்கின்றன.

கமல் செய்த உதவி:

பொதுவாக கமல்ஹாசனின் காமெடி திரைப்படங்களில் க்ரேசி மோகன்தான் வசனம் எழுதுவார். அப்படியாக கமல்ஹாசன் நடித்து பெரும் வெற்றி பெற்ற காமெடி திரைப்படம்தான் காதலா காதலா திரைப்படம். இந்த படத்தை பி.எல் தென்னப்பன் தான் தயாரித்தார்.

அப்போது அவர் பெரும் நிதி நெருக்கடியில் இருந்ததால் கமல்ஹாசனுக்கு அவரால் பெரிய தொகையை சம்பளமாக கொடுக்க முடியவில்லை. இந்த விஷயத்தை அறிந்த கமல்ஹாசன் எனக்கு சம்பளம் எதுவும் தர வேண்டாம். படம் வெளியாகும்போது மற்ற மொழிகளுக்கான உரிமத்தை எனக்கு கொடுங்கள் என கேட்டிருந்தார்.

அதன் படியே அவருக்கு செய்துக்கொடுத்தார் தயாரிப்பாளர். அந்த திரைப்படம் தமிழில் எதிர்பார்த்தை விடவும் அதிக வசூல் கொடுத்தது. ஆனால் மற்ற மொழிகளில் குறைவான வசூலே வந்தது. இந்த நிலையில் லாபத்தில் கமலுக்கு பங்கு கொடுக்கலாம் என கேட்டப்போது கமல் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

நீங்களே கஷ்டத்தில் இருக்கிறீர்கள் அந்த பணத்தை வைத்துக்கொள்ளுங்கள் என கூறியுள்ளார். இந்த விஷயத்தை அந்த தயாரிப்பாளர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

POPULAR POSTS

vijay ajith
ajith
gaundamani mirchi siva
aadukalam naren mysskin
annamalai vishal
mankatha
To Top