தொடர்ந்து நடக்கும் விபரீதங்கள்.. மரண பீதியில் இருக்கும் காந்தாரா படக்குழு..!

பஞ்சூரளி என்கிற ஆந்திராவை சேர்ந்த வட்டார தெய்வத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படம் காந்தாரா. பெரும்பாலும் பெரும் தெய்வங்களை வைத்து நிறைய திரைப்படங்கள் சினிமாவில் வந்த வண்ணம் இருக்கின்றன.

சிவன், விஷ்ணு மாதிரியான பெரிய கடவுள்கள் குறித்த படங்களை கூட பார்க்க முடியும். ஆனால் மக்கள் தங்கள் நிலங்களின் தெய்வங்களாக வணங்கும் சின்ன சின்ன தெய்வங்கள் குறித்த படங்கள் இதுவரை வந்ததில்லை.

அப்படி வந்த படங்கள் பெரிய வெற்றியை கொடுத்ததில்லை ஆனால் காந்தாரா அவற்றையெல்லாம் மாற்றி அமைத்தது. பஞ்சூரலி என்பது விவசாயிகள் வணங்கக்கூடிய ஒரு தெய்வமாகும். காட்டுப்பன்றியைதான் அவர்கள் தெய்வமாக வணங்குகின்றனர்.

Social Media Bar

அதை அடிப்படையாகக் கொண்டு வந்த காந்தாரா திரைப்படம் எக்கச்சக்கமான வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார் இயக்குனர் ரிஷப் ஷெட்டி. இந்த நிலையில் படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் திட்டமிடப்பட்டன.

இந்த முறை பஞ்சூரலி தெய்வத்தை தாண்டி புதிதாக ஒரு தெய்வத்தை படத்தில் கொண்டு வருகின்றனர். அது என்ன தெய்வம் என்பது படம் வெளியாகும் போது தான் தெரியும் ஆனால் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது முதலே அசம்பாவிதமான சம்பவங்கள் நடந்த வண்ணம் இருக்கின்றன.

ஏற்கனவே பாடத்தில் பங்களித்த மூன்று பேர் வெவ்வேறு வகையான காரணங்களால் இறந்துவிட்டனர். இது பட குழுவிற்கு மிகுந்த பயத்தை ஏற்படுத்தியிருந்தது இதற்கு நடுவே சமீபத்தில் படபிடிப்பு நடக்கும் பொழுது அங்கிருந்த படகு விபத்துக்குள்ளாகி படபிடிப்பு தொடர்பான பொருட்கள் எல்லாம் சேதமடைந்து இருக்கின்றன.

எனவே தொடர்ந்து காந்தாரா டு படத்திற்கான படப்பிடிப்பை கொண்டு செல்லலாமா என்பதிலேயே இப்பொழுது அச்சம் ஏற்பட்டுள்ளது.

Popular News

Categories

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.