500 பேரை வச்சி கார்த்திக் சுப்புராஜ் செஞ்ச சாதனை.. ரெட்ரோவில் இதை கவனிச்சீங்களா?. கொஞ்சம் கஷ்டம்தான்.!
தமிழ் சினிமாவில் கொஞ்சம் வரவேற்பை பெற்ற இயக்குனர்களில் முக்கியமானவர் கார்த்திக் சுப்புராஜ். பெரும்பாலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படங்களாகவே இருந்துள்ளன.
அந்த வகையில் தற்சமயம் அவரது இயக்கத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படத்தின் அனுபவம் குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருந்தார் கார்த்திக் சுப்புராஜ். அதில் அவர் சில வியப்புக்குரிய விஷயத்தை கூறியிருந்தார்.
கதைப்படி நடிகர் சூர்யாவிற்கு சிரிக்கவே தெரியாது என்பதால் அதை அவர் மெயிண்டைன் செய்ய வேண்டும். அதே சமயம் அவர் மகிழ்ச்சியாக இருப்பதையும் காட்ட வேண்டும். இதற்கு நடுவே சிங்கிள் ஷாட்டில் அந்த பாடலை படமாக்க முடிவு செய்தோம்.
சிங்கிள் ஷாட்டாக எடுப்பதில் உள்ள பிரச்சனை என்னவென்றால் கல்யாண மண்டபம் செட்டப் என்பதால் 500க்கும் அதிகமான நடிகர்கள் இருந்தனர். முக்கிய நடிகர்கள் சரியாக நடித்துவிடுவார்கள் தெரியும்.
ஆனால் மற்றவர்கள் சரியாக நடிக்காவிட்டால் பிரச்சனை. ஒருவர் தெரியாமல் கேமிராவை திரும்ப பார்த்துவிட்டாலும் காட்சியை மறுபடி எடுக்க வேண்டி இருக்கும். எனவே இரண்டு நாள் அந்த காட்சியை ரிகர்சல் எடுத்தோம். அதற்கு பிறகு மூன்றாம் நாள் எடுக்கும்போது எல்லோருமே சிறப்பாக அந்த காட்சியில் நடித்துவிட்டனர் என கூறியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.