தமிழ் சினிமாவிலேயே இப்படி ஏழரை இழுத்தவர் கவின் மட்டும்தான்!.. இப்பவே சம்பவம் ஸ்டார்ட் ஆயிடுச்சா!..

சினிமாவில் எப்போதுமே புது முகங்களாக நடிகர்கள் வந்துக்கொண்டுதான் இருப்பார்கள். மற்ற மொழிகளில் இருப்பது போல தமிழ் சினிமாவிலும் நெப்போடிசம் இருக்கதான் செய்கிறது. நடிகர்களின் வாரிசுகளும் சினிமாவிற்குள் களம் இறங்கதான் செய்கிறார்கள்.

ஆனால் நடிகர்களின் வாரிசுகள் என்பதற்காகவெல்லாம் அவர்கள் திரைப்படத்திற்கு மக்கள் வரவேற்பு தருவதில்லை. எவ்வளவு பெரிய நடிகரின் மகனாக இருந்தாலும் படம் நன்றாக இருந்தால்தான் மக்கள் படத்தை பார்க்கின்றனர். அதனால்தான் சிவாஜியின் மகனாகவே இருந்தாலும் நடிகர் பிரபுவால் சினிமாவில் பெரிதாக கால் பதிக்க முடியவில்லை.

அப்படி சினிமா பின்புலம் இல்லாமல் சினிமாவில் சாதிக்க வந்த இளைஞர்களில் கவின் முக்கியமானவர். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானார். சினிமாவில் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்பதுதான் இவரது ஆசையாக இருந்தது.

kavin
kavin

இந்த நிலையில் லிஃப்ட் என்கிற திரைப்படம் இவர் நடிப்பில் உருவாகி ஓ.டி.டியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்சமயம் வெளியான டாடா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார்.

தற்சமயம் 4 கோடி ரூபாய் சம்பளமாக கேட்டுள்ளாராம் கவின். இந்த நிலையில் அவர் படப்பிடிப்புக்கு சரியான நேரத்திற்கு வருவதில்லை என்று அவர் மீது குற்றச்சாட்டுக்கள் இருந்து வருகின்றன. இந்த நிலையில் தற்சமயம் நடித்து வரும் திரைப்படத்தில் படத்தின் ஃபைட் மாஸ்டருடன் பிரச்சனை செய்துள்ளாராம்.

பொதுவாக விஜய்,ரஜினி மாதிரியான பெரிய நடிகர்கள் கூட ஃபைட் மாஸ்டருக்கு அதிக மரியாதை கொடுப்பார்கள். அவர்கள் காலில் விழுந்து வணங்குவார்கள். ஆனால் இப்போது நடிக்க வந்த கவின் இப்படி செய்கிறாரே என கருத்து தெரிவிக்கின்றனர் சினிமா பத்திரிக்கையாளர்கள்

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version