Tag Archives: சினிமா

பாலிவுட் பிரபலங்களுடன் செய்யவும் ரெடி.. கடைசியாக இப்படி ஒரு முடிவை எடுத்த நம்பர் நடிகை..

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் இந்த நம்பர் நடிகையும் ஒருவர். வெகு காலங்களாக தனது கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாக கூறி வந்தாலும் இப்போது உண்மையில் அவர் அப்படி மகிழ்ச்சியாக இல்லை என்று கூறப்படுகிறது. இத்தனை ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நிறைய ஹிட் படங்களில் நடித்தவர் இந்த நடிகை.

பெரிதாக நடிக்க தெரியாது என்றாலும் கூட சில காரணங்களால் இவருக்கு தொடர்ந்து பெரிய நடிகர்கள் படங்களில் வாய்ப்புகள் கிடைத்தது. அதனை வைத்து தனக்கென தனி இடத்தை இவர் பிடித்துக்கொண்டார்.

ஆனால் சமீபத்தில் ஒரு நடிகருடன் இந்த நடிகைக்கு பெரிய பஞ்சாயத்து வந்தது. இந்த பஞ்சாயத்து தொடர்பாக நடிகரை விமர்சனம் செய்கிறேன் என வாய்க்கு வந்ததை எல்லாம் நடிகை பேசி வைத்திருந்தார். அதன் பின் விளைவுகளை பற்றி யோசிக்காமல் விட்டுவிட்டார்.

அவசரப்பட்ட நடிகை:

இந்த நடிகையின் பேச்சுக்கு எந்த பதிலும் அளிக்காத நடிகர் தற்சமயம் சத்தமே இல்லாமல் காயை நகர்த்த துவங்கியுள்ளார். நடிகைக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் இந்த நடிகர் சிரமத்தை ஏற்ப்படுத்தியுள்ளார். இதனால் இப்போது வாய்ப்பு எதுவும் இல்லாமல் கவலையில் இருக்கிறார் இந்த நடிகை.

இதற்கு நடுவே தனது கணவருக்கு எங்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என அவர் இயக்கும் திரைப்படத்தையும் இந்த நடிகைதான் தயாரித்துள்ளார். தற்சமயம் அதற்கும் காசு இல்லாமல் படப்பிடிப்பு பாதியிலேயே நிற்கிறது.

இது இல்லாமல் நிறைய நிறுவனங்கள் துவங்கி நடத்தி வருவதிலும் இவருக்கு சில கடன்கள் இருந்து வருகின்றன. அதையும் சமாளிக்க வேண்டி உள்ளதால் வேற்று மொழி படங்களில் இவர் வாய்ப்புகளை கேட்க துவங்கியுள்ளார்.

ஹிந்தி நடிகர்களுடன் சேர்ந்து குத்தாட்டம் போடுவதாக இருந்தாலும் ரெடி என அவர் முன் வந்துள்ளாராம்.

வயசான பொண்ணை கூட விட மாட்றாங்க!. விஷால் கார்த்தி எல்லாம் வந்த பிறகு… நடிகை ஷர்மிளாவின் ஷாக் நியூஸ்..!

தற்சமயம் மலையாளத்தில் நடந்து வரும் பாலியல் குற்றங்கள் தொடர்பான விஷயங்கள் அதிகமாக பேசப்பட்டு வருகின்றன. மலையாள சினிமாவில் சில காலங்களுக்கு முன்பு பிரபல நடிகை ஒருவர் காரிலேயே கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டார்.

அதனை தொடர்ந்து மலையாள நடிகைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்கிற நிலை உருவாகிறது. இதனை தொடர்ந்து நடிகைகள் அனைவரும் ஒன்றிணைந்து அவர்களுக்கு நடந்த பாலியல் குற்றங்களை கூறி இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்கள்.

இந்த நிலையில் அரசு நடவடிக்கை எடுக்கும் வகையில் ஹேமா கமிட்டி என்கிற கமிஷனை உருவாக்கியது. இவர்கள் தொடர்ந்து சினிமாவில் நடக்கும் பாலியல் குற்றங்களை கண்டுபிடித்து தற்சமயம் அதை வெளியிலும் கொண்டு வந்து உள்ளனர்.

கேரள சினிமா பாதிப்புகள்

கேரள சினிமாவில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கின்றன. இந்த நிலையில் நடிகை ஷர்மிளாவிடம் இதுக்குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது தமிழ் மலையாளம் என்று இரண்டு மொழிகளிலும் நடித்திருக்கிறார் ஷர்மிளா.

மொத்தம் இவர் 38 திரைப்படங்களில் நடித்திருக்கிறார் அதில் 20 திரைப்படங்கள் மலையாளத்தில் நடித்தவைதான், எனவே மலையாளத்தில் நடித்த பொழுது இந்த மாதிரியான பிரச்சனைகளை சந்தித்தது உண்டா என்று அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த சர்மிளா நான் பெரும்பாலும் மலையாளத்தில் இந்த மாதிரி பிரச்சனைகளை சந்தித்து கிடையாது. ஏனெனில் நான் படத்தில் கமிட் ஆகும்பொழுது இயக்குனருடனோ அல்லது தயாரிப்பாளருடனோ அட்ஜஸ்ட்மெண்ட் வைத்துக் கொள்ளும்படி வாய்ப்பு இருக்குமா என்று கேட்டு விடுவேன்.

தமிழ் சினிமாவில் உள்ள நிலை:

அப்படி ஒருவேளை அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் கூறினால் அந்த படத்தில் நடிக்க மாட்டேன் இதனால் தான் நான் குறைவான படங்களில் நடித்திருக்கிறேன். இருந்தாலும் கூட அப்படி அட்ஜஸ்ட்மென்ட் செய்து நடிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

ஆனால் தமிழ் சினிமாவோடு ஒப்பிடும் பொழுது மலையாள சினிமா மோசமாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளை குறிவைத்து பின்னாலேயே சுற்றுவார்கள். ஆனால் வயதான பிறகு நம்மை அக்கா என்றோ அம்மா என்றோ அவர்கள் அழைக்க துவங்கி விடுவார்கள்.

ஆனால் மலையாள சினிமாவில் வயதான பிறகு கூட நம்மை விட மாட்டார்கள் தமிழ் சினிமாவை பார்க்கும் பொழுது முன்பு இருந்த அளவிற்கு பாலியல் பிரச்சனைகள் இல்லை. ஏனெனில் விஷால் கார்த்தி போன்ற நடிகர்கள் வந்த பிறகு அதில் அவர்கள் கொஞ்சம் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றனர் என்று கூறுகிறார் ஷர்மிளா..

பட வாய்ப்புக்காக ஓ.கே!.. நடிகையும் தாயும் சேர்ந்து ஜில் நடிகருடன் உல்லாசம்.. அடக்கொடுமையே…

சினிமாவில் வாய்ப்பு வாங்குவதற்காக எவ்வளவோ எல்லை மீறும் கதைகளை கேட்டிருப்போம். ஆனால் நம்மையே வாய் பிளக்க வைக்கும் சம்பவம் ஒன்றை நடிகை குடும்பம் அரங்கேற்றியுள்ளது.

சின்னத்திரையில் வரும் நடிகைகள் பலருக்குமே சினிமாவில் கால் பதிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அப்படியாக ஒரு நடிகை நேரடியாக சினிமாவிற்கு போக போகிறேன் என கூறி சீரியலில் இருந்து விலகியுள்ளார்.

நடிகைக்கு வந்த ஆசை:

இந்த நிலையில் சீரியல் நடிகைக்கு எப்படி எடுத்த உடனே வாய்ப்பு கிடைக்கும். அதற்காக ஏதாவது செய்ய வேண்டும் அல்லவா. அதனால் அட்ஜெஸ்ட்மெண்டுக்கு கூட ரெடி நடிகையாக நடிக்க வாய்ப்பு கிடைத்தால் மட்டும் போதும் என்று ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுத்துள்ளார் நடிகை

நடிகையானால் கிடைக்கும் சம்பளம் அதிகமாக இருக்கும். வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என இந்த முடிவை எடுத்துள்ளாராம் நடிகை. இதில் அவரது அம்மாவும் மகளுக்கு மிகுந்த சப்போர்ட்டாக இருந்து வருகிறாராம்.

பயன்படுத்திய ஹீரோ:

மேலும் யாராவது தனது மகளுக்கு வாய்ப்பு கொடுக்கும் பட்சத்தில் தானுமே அட்ஜெஸ்ட்மெண்டுக்கு ரெடி என்கிற கோரிக்கையை வைத்துள்ளாராம் அந்த தாய். இதனை அறிந்து சினி சமூகம் சும்மா இருக்குமா.

பிரபல ஜில் நடிகர் ஒருவர் விவரத்தை அறிந்து நடிகைக்கு வாய்ப்பு தருவதாக கூறி மகள், தாய் இருவரையும் அழைத்து மூவரும் சேர்ந்து மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொண்டுள்ளனர். இந்த விஷயம் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் கசியவே இப்போது அங்கு இதுதான் பேசுபொருளாக இருக்கிறது.

தமிழ் சினிமாவிலேயே இப்படி ஏழரை இழுத்தவர் கவின் மட்டும்தான்!.. இப்பவே சம்பவம் ஸ்டார்ட் ஆயிடுச்சா!..

சினிமாவில் எப்போதுமே புது முகங்களாக நடிகர்கள் வந்துக்கொண்டுதான் இருப்பார்கள். மற்ற மொழிகளில் இருப்பது போல தமிழ் சினிமாவிலும் நெப்போடிசம் இருக்கதான் செய்கிறது. நடிகர்களின் வாரிசுகளும் சினிமாவிற்குள் களம் இறங்கதான் செய்கிறார்கள்.

ஆனால் நடிகர்களின் வாரிசுகள் என்பதற்காகவெல்லாம் அவர்கள் திரைப்படத்திற்கு மக்கள் வரவேற்பு தருவதில்லை. எவ்வளவு பெரிய நடிகரின் மகனாக இருந்தாலும் படம் நன்றாக இருந்தால்தான் மக்கள் படத்தை பார்க்கின்றனர். அதனால்தான் சிவாஜியின் மகனாகவே இருந்தாலும் நடிகர் பிரபுவால் சினிமாவில் பெரிதாக கால் பதிக்க முடியவில்லை.

அப்படி சினிமா பின்புலம் இல்லாமல் சினிமாவில் சாதிக்க வந்த இளைஞர்களில் கவின் முக்கியமானவர். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானார். சினிமாவில் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்பதுதான் இவரது ஆசையாக இருந்தது.

kavin

இந்த நிலையில் லிஃப்ட் என்கிற திரைப்படம் இவர் நடிப்பில் உருவாகி ஓ.டி.டியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்சமயம் வெளியான டாடா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார்.

தற்சமயம் 4 கோடி ரூபாய் சம்பளமாக கேட்டுள்ளாராம் கவின். இந்த நிலையில் அவர் படப்பிடிப்புக்கு சரியான நேரத்திற்கு வருவதில்லை என்று அவர் மீது குற்றச்சாட்டுக்கள் இருந்து வருகின்றன. இந்த நிலையில் தற்சமயம் நடித்து வரும் திரைப்படத்தில் படத்தின் ஃபைட் மாஸ்டருடன் பிரச்சனை செய்துள்ளாராம்.

பொதுவாக விஜய்,ரஜினி மாதிரியான பெரிய நடிகர்கள் கூட ஃபைட் மாஸ்டருக்கு அதிக மரியாதை கொடுப்பார்கள். அவர்கள் காலில் விழுந்து வணங்குவார்கள். ஆனால் இப்போது நடிக்க வந்த கவின் இப்படி செய்கிறாரே என கருத்து தெரிவிக்கின்றனர் சினிமா பத்திரிக்கையாளர்கள்

என்னை விட தகுதியான நடிகர்கள் இங்க இருக்காங்க!.. விஜய் சினிமாவை விட்டு போக இதுவும் ஒரு காரணமாம்!.

Actor vijay : நடிகர் விஜய் அரசியலுக்கு சென்ற பிறகு தமிழ்நாடு அரசியல் களமே கொஞ்சம் சூடு பிடித்துள்ளது என்றுதான் கூற வேண்டும். பொதுவாக மற்ற அரசியல்வாதிகளை பொறுத்தவரை அவர்கள் செய்யும் விஷயங்களை மக்கள் மத்தியில் பிரபலமாக்குவதற்கு மிகவும் கஷ்டப்பட வேண்டி இருக்கும்.

ஆனால் விஜய்யை பொருத்தவரை அவர் ஒரு துரும்பை அசைத்தால் கூட அது பெரும் செய்தியாக மக்கள் மத்தியில் வந்துவிடும். அப்படி ஒரு பெரும் நடிகராக விஜய் இருப்பதால் எளிதாக அவர் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார்.

விஜய் சினிமாவை விட்டு 2026 ஆம் ஆண்டோடு விலக இருக்கிறார் என்று பேச்சுக்கள் இருக்கின்றன. இந்த நிலையில் அரசியலில் அவர் செய்யும் ஒவ்வொரு விஷயமும் அவரது ரசிகர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் விஷயமாக இருக்கிறது.

தற்போது உள்ள நிலவரப்படி சினிமா அப்டேட்டுகளை விடவும் விஜய்யின் அரசியல் அப்டேட்டுகளுக்காக தான் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் விஜய் சினிமாவை விட்டு போனதற்கு இன்னொரு விஷயமும் காரணம் என்று கூறப்படுகிறது.

விஜய்யின் முடிவு:

அவர் முன்பு ஒருமுறை மேடையில் பேசிய காணொளியும் இதற்காக பிரபலமாகி வருகிறது. அதில் விஜய் பேசும் பொழுது என்னைவிட திறமைசாலியான அழகான நடிகர்கள் தமிழ் சினிமாவில் என்னுடைய இடத்தை பிடிப்பதற்கு முயற்சி செய்து வருகின்றனர்.

vijay

கடினமாக போராடும் வகையில் அவர்களுக்கும் இந்த இடம் கிடைக்கும் என்று கூறியிருக்கிறார் விஜய். எனவே அப்படியான எதிர்காலத் தலைமுறையினருக்காக தான் தற்சமயம் சினிமாவில் தன்னுடைய இடத்தை விட்டு செல்கிறார் விஜய். இல்லையென்றால் அரசியலில் இருந்து கொண்டே கூட அவரால் திரைப்படங்களில் நடிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

இருந்தாலும் விஜய் சினிமாவை விட்டுப் போக காரணம் அடுத்த தலைமுறைக்கு வழி விட வேண்டும் என்பதற்காகவே என்று பேச்சுக்கள் இருக்கின்றன.

போய் சாவு போ. பாலசந்தர் சும்மா சொன்ன வார்த்தையால் ஏற்பட்ட விபரீதம்.

தமிழில் உள்ள சினிமா இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பாலச்சந்தர். பாலச்சந்தர் இயக்கும் திரைப்படங்கள் அனைத்திற்குமே எப்போதும் நல்ல வரவேற்பு இருந்து வந்தது.

மேலும் தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற முக்கியமான நடிகர்களை வளர்த்து விட்டவர் பாலச்சந்தர். பாலச்சந்தர் குறித்து ஒரு முக்கியமான விஷயத்தை கமல்ஹாசன் பகிர்ந்திருந்தார். பாலச்சந்தர் கெட்ட வார்த்தை சொல்லி யாரையுமே திட்ட மாட்டாராம்.

எப்போதும் யாராவது தவறு செய்து விட்டால் இன்று நீ செத்த என்ற வார்த்தையைதான் அதிகமாக பயன்படுத்துவார். இப்படி இருக்கும் பொழுது ஒரு நாள் படப்பிடிப்பு முடிந்து வரும் பொழுது படக்குழு சென்ற வண்டி விபத்துக்குள்ளானது.

இந்த விஷயம் பாலச்சந்தருக்கு தெரிந்தவுடன் அதைப் பற்றி விசாரித்தார் அப்பொழுதுதான் சிலர் இந்த விபத்தில் இறந்தது தெரியவந்துள்ளது யாரெல்லாம் இறந்தார்கள் என்று பாலச்சந்தர் கேட்கும்பொழுது அதில் அவரது தம்பி இறந்த விஷயம் பாலச்சந்தருக்கு தெரிந்துள்ளது.

அதற்கு முன்புதான் வழக்கமாக திட்டுவது போல அவரது தம்பியையும் நீ செத்த எனக்கூறி திட்டி இருந்தார் பாலச்சந்தர். இந்த நிகழ்வுக்குப் பிறகு தன் வாழ்நாள் முழுவதும் யாரையும் அப்படி அவர் திட்டியது கிடையாது என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.