News
ஒரு மாசத்துல தமிழ்நாட்டுல மட்டும் இவ்ளோ வசூல்! – கேஜிஎஃப்2 உண்மை வசூல் நிலவரம்!
கன்னட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடித்து சமீபத்தில் வெளியான படம் கேஜிஎஃப் சேப்டர் 2.

கடந்த 2018ல் வெளியான கேஜிஎஃப் சேப்டர் 1 இந்தியா முழுவதும் இந்த படத்தின் மீது மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த இரண்டாவது பாகம் பெரும் வெற்றி பெற்றுள்ளது.
படம் வெளியாகி 25 நாட்களை கடந்து விட்ட நிலையில் ரூ.1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து தொடர்ந்து திரையரங்குகளிலும் ஓடி வருகிறது.
கிட்டத்தட்ட படம் வெளியாகி 4 வாரங்கள் நிறைவடையும் நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் கேஜிஎஃப் 2 செய்த கலெக்சன் வார ரீதியாக வெளியாகியுள்ளது.
வாரம் 1 – ரூ.59.84 கோடி
வாரம் 2 – ரூ.32.65 கோடி
வாரம் 3 – ரூ.21.30 கோடி
வாரம் 4 – ரூ.13.33 கோடி
ஆக, மொத்தமாக இதுவரை கேஜிஎஃப் 2 தமிழ்நாட்டில் மட்டும் ரூ.127.12 கோடியை வசூல் செய்துள்ளது.
