Connect with us

ஹாலிவுட்டை காபி அடிச்சி கமல்ஹாசன் எடுத்த திரைப்படங்கள்!.. லிஸ்ட்டு பெருசா போகுதே!.

kamal movies

Special Articles

ஹாலிவுட்டை காபி அடிச்சி கமல்ஹாசன் எடுத்த திரைப்படங்கள்!.. லிஸ்ட்டு பெருசா போகுதே!.

cinepettai.com cinepettai.com

 வெளிநாட்டு சினிமாவை தமிழுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தவர் நடிகர் கமல்ஹாசன். ஏனெனில் அவரது சிறு வயது முதலே உலக சினிமாக்கள் அனைத்தையும் பார்த்த கமல்ஹாசன் அதிலிருந்து தமிழ் சினிமா சற்று பின்னடைவைதான் கண்டுள்ளது என்பதை கண்டறிந்து கொண்டார்.

எனவே தமிழ் சினிமாவையும் உலக தரத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது அவரது ஆசையாக இருந்தது. இந்த நிலையில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமாரோடு சேர்ந்து பல உலக திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்குள் கொண்டு வந்துள்ளார் கமல். ஆனால் அவற்றை தமிழில் எடுப்பதற்கு அதன் ஒரிஜினல் பட தயாரிப்பாளர்களிடம் இவர் அனுமதி பெறவில்லை என்பதுதான் இதில் நெருடலான விஷயம். இப்படியாக கமல் காப்பி அடித்த சில ஹாலிவுட் திரைப்படங்களை இப்போது பார்ப்போம்.

அவ்வை சண்முகி

ஹாலிவுட் வெளியான மிஸஸ் டவுட் ஃபயர் என்கிற திரைப்படத்தின் தழுவலாக தமிழில் எடுக்கப்பட்ட திரைப்படம்தான் அவ்வை சண்முகி. திரைப்படத்தில் மூன்று பிள்ளைகளுக்கு அப்பாவாக இருக்கும் கதாநாயகன் சில சூழ்நிலைகளின் காரணமாக மனைவியை விவாகரத்து செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும்.

இந்த நிலையில் தனது பிள்ளைகளை பிரிந்து இருக்க முடியாத அந்த கணவன் பெண் வேடமிட்டு அந்த வீட்டிற்கு வேலைக்கு செல்வதாக கதை இருக்கும். அதை அப்படியே எடுத்து தமிழில் அவ்வை சண்முகி என்று படமாக்கினார் கே எஸ் ரவிக்குமார் அதற்கு கமல்ஹாசன் உதவினார்.

வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்

வசூல்ராஜா எம்.பி.பிஎஸ் திரைப்படம் நேரடியாக ஹாலிவுட் படத்தில் இருந்து துக்கப்படவில்லை. முதலில் அது ஹிந்தியில் தான் படமாக்கப்பட்டது ஆனால் அதன் ஒரிஜினல் திரைப்படம் பேட்ச் ஆடம்ஸ் என்கிற ஹாலிவுட் திரைப்படம்.

இந்த திரைப்படத்தில் கிட்டத்தட்ட மருத்துவத்திற்கு தொடர்பு இல்லாத ஒருவர் மருத்துவத் துறைக்கு சென்று செய்யும் காமெடிகள் திரைப்படமாக இருக்கும். அதனை பின் கதையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் முன்னாபாய் எம்.பி.பி.எஸ் அந்த முன்னாபாய் எம்.பி.பி.எஸ் திரைப்படத்தை தான் தமிழில் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் என்று எடுத்தனர்

தெனாலி

கே எஸ் ரவிக்குமார் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் ஹாலிவுட்டில் காப்பி அடிக்கப்பட்ட மற்றொரு திரைப்படம் தெனாலி. வாட் அபௌட் பாப் என்கிற திரைப்படத்தின் கதையை தமிழில் படமாக திட்டமிட்டனர் கமல்ஹாசனும் கே எஸ் ரவிக்குமாரும், அதன் அடிப்படையில் அவர்கள் இயக்கிய திரைப்படம்தான் தெனாலி. எதைப் பார்த்தாலும் பயப்படும் பாப்பிற்கு ஒரு மனநல மருத்துவர் கொடுக்கும் சிகிச்சையை காமெடியாக சொல்லும் திரைப்படம்தான் அந்த படம் அப்படியே காப்பி அடித்து அதை தமிழில் படமாக்கினார்கள் கே எஸ் ரவிக்குமாரும் கமல்ஹாசனும்

பஞ்சதந்திரம்

ஹாலிவுட்டில் வந்த வெரி பேட் திங்ஸ் என்னும் படத்தின் கதைதான் பஞ்சதந்திரம். ஒரு கொலையை மேற்கொள்ளும் ஐந்து நண்பர்கள் அதை எப்படி மறைக்கிறார்கள் என்பதாக செல்லும் கதையை அடிப்படையாகக் கொண்டு தமிழில் எடுக்கப்பட்ட திரைப்படம் பஞ்சதந்திரம். இந்த திரைப்படத்தையும் கே.எஸ் ரவிக்குமாரும் கமல்ஹாசனும் இணைந்து செய்திருந்தனர்

அன்பே சிவம்

தமிழில் வெளிவந்த அன்பே சிவம் திரைப்படத்தில் கமல்ஹாசன், மாதவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சுந்தர் சி அந்த படத்தை இயக்கியிருந்தார். Planes, trains and automobiles என்னும் ஆங்கிலத் திரைப்படத்தின் கதையை காப்பி அடித்து தமிழில் எடுக்கப்பட்ட திரைப்படம்தான் அன்பே சிவம்.

இரண்டு நபர்கள் பயணம் செய்யும்பொழுது நடக்கும் சாகசங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படம் கிட்டத்தட்ட அன்பே சிவத்துடன் ஒத்துப் போகும் கதை என்றாலும் தமிழுக்கு ஏற்றார் கமல்ஹாசன் இதில் சில மாறுதல்களையும் செய்திருந்தார்

மகளிர் மட்டும்

1994 ஆம் ஆண்டு வெளிவந்த மகளிர் மற்றும் திரைப்படம் 9 டு 5 என்கிற ஹாலிவுட் படத்தின் தழுவல் என்று கூறப்படுகிறது

மன்மதன் அம்பு

கமல்ஹாசனும் மாதவனும் மீண்டும் இணைந்து நடித்த திரைப்படம் மன்மதன் அன்பு Romance on High Seas என்கிற திரைப்படத்தின் கதைதான் இது என்று கூறப்படுகிறது. மன்மதன் அம்பு திரைப்படமும் கே.எஸ் ரவிக்குமார் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் உருவான திரைப்படம் ஆகும்

ஒரு திரைப்படத்தைப் பொறுத்தவரை அதை உருவாக்கியவர்களிடம் கேட்டு வேறு மொழியில் படமாக்கினால் அதை ரீமேக் என்று கூறுவார்கள். ஆனால் அதே கதையை திருட்டுத்தனமாக எடுத்து வேறு மொழியில் அவர்கள் அனுமதி இல்லாமல் படமாக்கினால் அதை காப்பி என்று கூறுவார்கள் அந்த வகையில் இந்த திரைப்படங்கள் அதன் உண்மை படங்களிடம் அனுமதி பெற்று எடுக்கப்படவில்லை என்பதால் இவையெல்லாம் தமிழில் காப்பியடித்து எடுக்கப்பட்ட திரைப்படங்கள் ஆகும்.

POPULAR POSTS

ajith
gaundamani mirchi siva
aadukalam naren mysskin
annamalai vishal
mankatha
top cook dupe cook
To Top