கமல்ஹாசனுக்காக என்னை கேவலமா பேசிப்புட்டாங்க.. கே.எஸ் ரவிக்குமாருக்கு படப்பிடிப்பில் நடந்த சம்பவம்.!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார். பெரும்பாலும் கே.எஸ் ரவிக்குமார் இயக்கும் படங்கள் அப்பொழுதெல்லாம் நல்ல வெற்றியை கொடுத்து வந்தது.

அதனால் பெரிய நடிகர்கள் பலருமே கே.எஸ் ரவிக்குமார் திரைப்படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வந்தனர். இந்த நிலையில் முன்பு படப்பிடிப்புகளில் தனக்கு நடந்து நிகழ்வு ஒன்றை பகிர்ந்து இருக்கிறார்கள் கே.எஸ் ரவிக்குமார் அதில் அவர் கூறும் பொழுது பொதுவாகவே எனக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது.

எவ்வளவு பெரிய நடிகர்களை வைத்து படம் எடுத்தாலும் சிகரெட் பிடித்து விடுவேன் இந்த நிலையில் அவ்வை சண்முகி படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுது இதே போல கமல்ஹாசனின் முன்பு சிகரெட் அடித்துக்கொண்டு இருந்தேன்.

Social Media Bar

அதிர்ச்சியடைந்த கே.எஸ் ரவிக்குமார்:

அதற்கு முன்பு ரஜினி படத்தின் பொழுதும் அதே போல செய்து இருக்கிறேன் ஆனால் அப்பொழுது ரஜினி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் கமல்ஹாசன் படத்தில் அப்படி சிகரெட் பிடித்துக் கொண்டிருந்த பொழுது அங்கு எனக்கு தெரிந்த நண்பர்கள் சிலர் வந்தார்கள்.

அவர்கள் என்னிடம் மிகக் கடுமையாக பேச துவங்கிவிட்டனர் கமலஹாசன் திரைப்படங்களை எத்தனை முறை திரையரங்குகளுக்கு சென்று பார்த்திருப்போம். அவரை நேரில் பார்ப்போமா? என்பதே பெரிய விஷயமாக இருந்திருக்கும் இப்படிப்பட்ட நபர் படப்பிடிப்பில் நிற்கும்பொழுது நீ சிகரெட் பிடித்துக் கொண்டிருக்கிறாயா? என்று கூறி சத்தம் போட்டனர் அன்றிலிருந்து கமல்ஹாசன் முன்பு சிகரெட் அடிப்பதை நான் விட்டு விட்டேன் என்று கூறியிருக்கிறார் கே எஸ் ரவிக்குமார்.