News
கரையில் நின்றே நான்கு நாள் வெளுத்து வாங்கும் புயல்.. எந்த மாவட்டங்களுக்கு ஆபத்து.. ரேடார் மேப் வழி விவரங்கள்.!
கடந்த இரண்டு நாட்களாகவே டெல்டா பகுதிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒன்று உருவாகி இருந்தது. இன்று காலை வரை காற்றழுத்த தாழ்வு நிலையாக இருந்தது
ஆனால் காலையிலிருந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இருக்கிறது சென்னையில் இருந்து சுமார் 1050 km தென்கிழக்கு திசையிலும் திரிகோண மலையிலிருந்து 600 km தென்கிழக்கு திசையிலும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலு கொண்டு இருக்கிறது.
இன்று மாலையில் இருந்து சிறிது சிறிதாக மழையில் துவங்கி அது கனமழையாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் நாளை அதிக கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
பாதிக்கும் மாவட்டங்கள்:
மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நாளை மதியம் ஒரு மணி வரைக்கும் மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது 26 ஆம் தேதி வலுப்பெறும் இந்த மழையானது ஆரம்பத்தில் கடலோர மாவட்டங்களில் மட்டுமே வலுப்பெற்று மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இதன் பாதிப்பு 27ஆம் தேதி கோயம்புத்தூர் வரையிலுமே இருக்கும் என்று கூறப்படுகிறது .ஆரம்பத்தில் டெல்டா பகுதிகளில் உள்ள குறிப்பிட்ட 4 மாவட்டங்கள் மட்டுமே பாதிக்கப்படும் என்று கணிக்கப்பட்ட நிலையில் இப்பொழுது ரேடாரின் தகவல்கள் படி தமிழகத்தில் பெரும்பான்மையான மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேரம் மற்றும் நாள் வாரியாக இந்த ரேடாரின் கணிப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.
26.11.2024 12.00 AM
26.11.2024 10.00 AM
27.11.2024 10.00AM
27.11.2024 10.00PM
28.11.2024 11.00 AM
