பிரபல பாலிவுட் நடிகை எண்ட்ரி.. தனுஷ் பட இயக்குனருடன் கூட்டணி போட்ட லெஜண்ட் சரவணா..!

என்னதான் தொழிலதிபர்கள் நடிகர்களை விட பெரும் பணக்காரர்களாகவும் சொத்து உள்ளவர்களாகவும் இருந்தாலும் கூட நடிகர்களுக்கு கிடைக்கும் புகழ் என்பது பிரபல கோடீஸ்வரர்களுக்கும் பணக்காரர்களுக்கும் கிடைப்பது கிடையாது.

இதனாலேயே சிலர் பணக்காரர்களாக இருந்தாலும் சினிமாவின் மீது ஆசைப்படுவது உண்டு. முன்பு இதே மாதிரி ஆசைப்பட்டு மாதம்பட்டி ரங்கராஜ் தமிழில் ஒரு திரைப்படத்தில் நடித்தார். ஆனால் அவருக்கு அது பெரிதாக வரவேற்பு பெற்று தரவில்லை.

பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக அவர் பிரபலம் அடைந்தார். அதே போல சினிமா மீது ஆசை கொண்ட இன்னொரு நபராக நடிகர் லெஜண்ட் சரவணன் இருந்து வருகிறார். இவர் லெஜண்ட் என்கிற ஒரு திரைப்படத்தில் நடித்தார்.

அடுத்த படம்:

legend saravana
legend saravana
Social Media Bar

ஆனால் அந்த திரைப்படம் தயாரிப்பு ரீதியாக திரைக்கதையிலேயே நிறைய பிரச்சனைகள் இருந்ததால் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இதனை தொடர்ந்து ஒரு நல்ல இயக்குனர் திரைப்படத்தில் தான் அடுத்து நடிக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தார் லெஜெண்ட் சரவணன்.

அந்த வகையில் தற்சமயம் தமிழில் எதிர்நீச்சல், கொடி, கருடன் மாதிரியான திரைப்படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜெண்ட் சரவணா ஒரு திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் நடிகைகள் அனைவருமே முக்கியமான ஆட்களாக இருக்கின்றனர் பாலிவுட்டில் புகழ்பெற்ற நடிகையான பாயல் ராஜ்புத் இதில் நடிக்கிறார்.