Latest News
சாரி மச்சான் நீ செத்துட்ட – சாந்தனுவிற்கு கலாய் பதிலளித்த லோகேஷ்
விக்ரம் திரைப்படம் வெளியான நிலையில் ஒரு வாரமாக விக்ரம் குறித்த செய்திகளே இணையத்தில் வலம் வந்து கொண்டுள்ளன. விக்ரம் அடைந்த வெற்றியை கொண்டாடும் விதமாக கமல்ஹாசனும் படக்குழுவிற்கு பல வித பரிசுகளை வழங்கி வருகிறார். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ், உதவி இயக்குனர்கள், சூர்யா ஆகியோருக்கு பரிசுகளை வழங்கியுள்ளார்.\
இந்நிலையில் நேற்று டிவிட்டரில் தன்னிடம் படம் குறித்து எந்த கேள்வியை வேண்டுமானாலும் கேட்கலாம். என கூறியிருந்தார்.
இதனால் பலரும் பல விதமான கேள்விகளை கேட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சாந்தனு, லோகேஷ் கனகராஜூடம் “மாஸ்டர் படத்தில் இறந்த பார்கவ் கதாபாத்திரம் விக்ரம் திரைப்படத்தில் உயிர் பெற்று வருவதற்கு ஏதாவது வாய்ப்பு உண்டா?” என கேட்டிருந்தார்.
அதற்கு லோகேஷ் கனகராஜ் “சாரி மச்சி பார்கவ் இறந்துட்டான்” என நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.