Connect with us

உருவானது லோகேஷ் யுனிவர்ஸ் – அதிகாரபூர்வமாக அறிவித்த லோகேஷ்

News

உருவானது லோகேஷ் யுனிவர்ஸ் – அதிகாரபூர்வமாக அறிவித்த லோகேஷ்

Social Media Bar

எப்போது விக்ரம் படம் திரையரங்குகளில் வெளியானதோ அப்போதில் இருந்தே லோகேஷ் கனகராஜ் யுனிவர்ஸ் பற்றிய பேச்சுக்களும் ரசிகர்கள் இடையே வலம் வர துவங்கின. கைதி திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் விக்ரம் திரைப்படத்தில் தோன்றியதே இதற்கு காரணமாக அமைந்தது.

விக்ரம் அடுத்த பாகத்திற்கு ப்ளான் இருப்பதாகவும் அதில் முக்கிய வில்லனாக சூர்யா இருப்பார் எனவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் கைதி திரைப்படமும் இரண்டாம் பாகம் வர உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இந்த படங்கள் அனைத்தும் இணையும் இடமாக விக்ரமின் அடுத்த பாகம் இருக்கும்.

அதில் கமல், பகத் ஃபாசில் மற்றும் கார்த்தி மூவரும் கதாநாயகர்களாக வருவார்கள் என கூறப்பட்டது.

எனவே ஹாலிவுட்டில் சினிமாட்டிக் என்கிற பெயரில் பல படங்களை ஒன்றிணைத்து ஒரு படத்தை எடுப்பார்கள். அதே முறையில் லோகேஷின் இந்த படமும் வர இருப்பதால் அந்த படங்களில் எல்லாம் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்ற பெயர் வரும் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் மக்களே ஆசைப்பட்டு இந்த பெயரை அளித்துள்ளதால் அதை பயன்படுத்துவதில் அவர் மகிழ்ச்சியடைவதாக கூறியுள்ளார்.

Bigg Boss Update

To Top