மஞ்சள் நிற அழகி – பார்ப்பவரை சொக்க வைக்கும் மடோனா புகைப்படங்கள்

பிரேமம் படம் மூலமாக தென்னிந்திய ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை மடோனா சபேஸ்டியன். பிரேமத்திற்கு பிறகு இவர் தமிழில் பல படங்களில் நடித்தார். அதில் கவண் மற்றும் காதலும் கடந்து போகும் ஆகிய படங்கள் முக்கியமான படங்கள் ஆகும். 

இந்த இரண்டு படங்களிலுமே அவருக்கு ஜோடியாக விஜய் சேதுபதி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. பிறகு வெகுநாட்களுக்கு பிறகு சாம் சிங்காராய் திரைப்படத்தில் வக்கீல் வேடத்தில் நடித்துள்ளார்.

தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வந்துக்கொண்டிருக்கும் வேளையிலும், இவருக்கு தமிழில் குறைவான அளவிலேயே வாய்ப்புகள் வருகின்றன. எனவே அடிக்கடி தனது அழகிய புகைப்படங்களை இவர் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் இன்று மஞ்சள் நிற ஆடையில் இவர் வெளியிட்ட க்யூட் புகைப்படங்கள் மிகவும் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இந்த புகைப்படங்களை லைக் செய்துள்ளனர்.

Refresh