அனிமேஷனில் வந்த மகா அவதார் நரசிம்மா.. திரைப்படம் எப்படி இருக்கு..!

இயக்குனர் அஸ்வின் குமார் இயக்கத்தில் தற்சமயம் உருவாகி வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் மகா அவதார் நரசிம்மா.

இந்த திரைப்படத்தை கே.ஜி.எஃப் திரைப்படத்தை தயாரித்த ஹம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. வழக்கமான நரசிம்மரின் கதைதான் என்றாலும் கூட பெரிய பட்ஜெட்டில் அனிமேஷனில் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இதற்கு முன்பு விஷ்ணு பகவானின் தசாவதாரங்கள் பலவும் படமாக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால் இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் எந்த ஒரு படமும் உருவாக்கப்படவில்லை.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மற்ற அவதாரங்களும் படமாக்கப்பட இருப்பதாக ஹம்பாளே பிலிம்ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. தற்சமயம் தியேட்டரில் வெளியாக இருக்கும் நரசிம்மா திரைப்படம் கோச்சடையான் திரைப்படம் போல அனிமேஷனில் சொதப்பி இருக்குமா என்பது பலரது கேள்வியாக இருந்தது.

Social Media Bar

ஆனால் இந்த திரைப்படத்தின் அனிமேஷன் இப்பொழுது வரவேற்பை பெற்று இருக்கிறது. படத்தின் கதை ஓட்டமும் மிகச் சிறப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில் நரசிம்மா அவதாரத்தின் கதையைப் பொறுத்தவரை பெரும்பான்மையான மக்களுக்கு அந்த படத்தின் கதை ஏற்கனவே தெரியும் என்று தான் கூற வேண்டும்.

அப்படிப்பட்ட நிலையில் கதையை சுவாரசியமாக கொண்டு செல்வது சவாலான விஷயமாகும் இருந்தாலும் கூட படத்தை மிக சுவாரசியமாக கொண்டு சென்று இருக்கின்றனர். முதல் நாளிலேயே இந்த படத்திற்கு வரவேற்பும் அதிகமாக கிடைத்து இருக்கிறது.

ஆரம்பத்தில் குறைவான திரையரங்குகளில் வெளியாகி இருந்தாலும் அடுத்து இந்த படத்திற்கான திரையரங்குகள் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Popular News

Categories

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.