News
மறுபடியும் சண்டை போட்ட அசிம் – சண்டையை கிளப்பிய மகேஸ்வரி..!
பிக் பாஸ் தொடரில் அசிமிற்கு பல வகையில் கெட்ட பெயர்கள் வந்து சேர்ந்த வண்ணம் உள்ளன. கடந்த இரு வாரங்களாக பிக் பாஸ் நிகழ்வானது அவ்வளவு சுமூகமாக முடியவில்லை. முதல் வாரம் ஆயிஷாவிற்கும் அசிமிற்கும் இடையே கடுமையான சண்டைகள் நடந்தன.

அதற்கு பிறகு போன வாரம் நீயும் பொம்மை நானும் பொம்மை என்கிற போட்டியில் தனலெட்சுமியுடன் அசிமிற்கு பெரும் சண்டை ஏற்பட்டது. இந்த நிலையில் அவரது பேச்சுக்கள் சரியில்லை என கமல் அவருக்கு எச்சரிக்கை செய்திருந்தார்.
இதனால் இந்த வாரம் துவங்கியது முதலே மிகவும் அமைதியாக இருந்து வருகிறார் அசிம். இந்த நிலையில் மகேஸ்வரிக்கும் அசிமிற்கும் இன்று பெரும் சண்டை ஏற்பட்டது. பார்க்கும்போது மகேஸ்வரிதான் சண்டையை ஆரம்பித்துள்ளார் என தெரிகிறது.
இந்த சண்டை மீண்டும் அசிமிற்கு கெட்ட பெயரை ஏற்படுத்துமா? என பிக்பாஸ் ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.
