Latest News
சம்மதம் சொன்ன விஜய், அஜித்.. மங்காத்தா 2 ஆரம்பம்? – வெங்கட் பிரபு போட்ட ட்வீட்!
நடிகர் அஜித்தை வைத்து வெங்கட்பிரபு இயக்கி 2011ல் வெளியான படம் மங்காத்தா. ஆண்டி ஹீரோ ரோலில் அஜித் நடித்த இந்த படம் அதிரிபுதிரி ஹிட் அடித்தது.
அதை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் அடிக்கடி வெங்கட்பிரபுவிடம் கேட்டு வந்தனர். கடந்த சில நாட்கள் முன்னதாக மங்காத்தா படத்தில் அஜித்தின் நண்பராகவும், போலீஸ் அதிகாரியாகவும் வரும் அர்ஜுன் கதாப்பாத்திரத்திற்கு விஜய்யிடம் நடிக்க கேட்டிருந்ததாக சில தகவல்கள் சினிமா வட்டாரத்தில் உலா வந்தது.
”சே.. ரெண்டு பேரும் சேர்ந்து நடிச்சிருந்தா அந்த படம் மாஸா இருந்திருக்குமே” என ரசிகர்கள் அதுகுறித்து கருத்தும் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் மங்காத்தா இரண்டாம் பாகத்தை வெங்கட்பிரபு இயக்க உள்ள நிலையில் அது விஜய், அஜித் இருவரும் சேர்ந்து நடிக்க ஒப்புக்கொண்டதாக சிலர் சோசியல் மீடியாக்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இதை கண்டு அதிர்ச்சியான வெங்கட்பிரபு ‘எனக்கே தெரியாம இது எப்ப நடந்துச்சு’ என்று அதிர்ச்சியாய் ”இது எப்போ?” என அதிர்ச்சியாய் ஒரு எமோஜியை பகிர்ந்துள்ளார்.
விஜய் இடத்த சிவகார்த்திகேயன் பிடிப்பாரா? சிக்கிய எஸ்.ஜே.சூர்யா!