Connect with us

ரகசியமாக காதலருடன் மீனா நடத்திய சந்திப்பு… அடுத்த கல்யாணம் அவர் கூடத்தான்..!

meena

Latest News

ரகசியமாக காதலருடன் மீனா நடத்திய சந்திப்பு… அடுத்த கல்யாணம் அவர் கூடத்தான்..!

Social Media Bar

 சிறுவயது முதலே தமிழ் சினிமாவில் பாராட்டை பெற்ற நடிகையாக இருந்து வருபவர் நடிகை மீனா. தொடர்ந்து மீனா குறித்து தற்சமயம் நிறைய சர்ச்சைகள் உருவாகி வருகின்றன. மீனாவிற்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை இருக்கிறது.

அவரும் கூட தெறி திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் மீனா அடுத்த கல்யாணம் எப்போது செய்யப் போகிறார் என்பது தொடர்ந்து கேள்வியாக இருந்து வருகிறது. ஏனெனில் மீனாவிற்கு 47 வயது ஆகியிருந்தாலும் கூட அவர் பார்ப்பதற்கு இன்னும் இளமையாகதான் தெரிகிறார்.

மறுமணம் சர்ச்சை:

இந்த நிலையில் கண்டிப்பாக அவர் மறுமணம் செய்து கொள்ள போகிறார் என்று பேச்சுக்கள் இருந்து வருகின்றன. அவர் மறுமணம் செய்து கொள்ள போகிறார் என்பது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும்  இல்லாத காரணத்தினால் அதுவே ஒரு பெரிய பேச்சு பொருளாக ஆகி வருகிறது.

meena-
meena-

இதற்கு நடுவே நடிகர் பிரசாந்தை மீனா திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வந்தன. ஆனால் அது குறித்தும் எந்த ஒரு அதிகார பூர்வமான தகவல்களும் வெளிவரவில்லை நடிகர் தனுஷிற்கும் இவருக்கும் மறுமணம் ஆகப் போகிறது என்று ஒரு பேச்சு இருந்தது.

ஆனால் அதற்கெல்லாம் வாய்ப்பே கிடையாது என்று ஒரு பக்கம் கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரபல பத்திரிகையாளரான சபிதா ஜோசப் இது குறித்து பேசி இருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது மீனா திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே அவருக்கு ஒரு காதல் இருந்தது என்று கூறப்படுகிறது.

இளமையில் வந்த காதல்:

தமிழ் சினிமாவிலேயே நடிகையாக நடித்து பெரிதாக சர்ச்சைக்கு உள்ளாகாத ஒரு நடிகை என்றால் அது மீனாதான். இருந்தாலும் கூட அவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு பிரபல நடிகருடன் காதல் இருந்ததாக கூறப்படுகிறது.

meena
meena

இந்த நிலையில் அந்த சமயத்திலேயே அடிக்கடி அந்த நடிகரை சந்திப்பதற்காக தனியாக அறை புக் செய்து அங்கே இவர்கள் இருவரும் ரகசியமாக சந்தித்துக் கொள்வார்கள். ஆனால் குடும்ப பிரச்சனை காரணமாக அந்த நடிகரை மீனாவால் திருமணம் செய்து கொள்ள முடியாமல் போனது.

அதனை தொடர்ந்து அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்தது. இந்த நிலையில் தற்சமயம் மீனா மறுபடியும் மறுமணம் செய்வதாக இருந்தால் அந்த நபரை செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று கூறும் சபிதா ஜோசப் அந்த நடிகர் யார் என்று மட்டும் கூறவில்லை.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
To Top