Connect with us

கமலோட முத்தக்காட்சி ஒண்ணு வச்சாங்க… அம்மாக்கிட்ட போய் அழுதுட்டேன்!.. உண்மையை கூறிய நடிகை மீனா!.

meena kamalhaasan

Cinema History

கமலோட முத்தக்காட்சி ஒண்ணு வச்சாங்க… அம்மாக்கிட்ட போய் அழுதுட்டேன்!.. உண்மையை கூறிய நடிகை மீனா!.

cinepettai.com cinepettai.com

Actress Meena and Kamalhaasan :  தமிழ் சினிமா நடிகைகளில் பெரும்பாலும் பெரும் நடிகர்களோடு மட்டுமே நடித்த நடிகை என்றால் அது மீனாதான். மீனா சினிமாவிற்கு வந்த குறைந்த காலகட்டத்திலேயே அவருக்கு அதிகமான வாய்ப்பு கிடைக்க காரணமாக இருந்தது அவரது முதல் படம்.

கதாநாயகியாக அவர் முதன்முதலாக நடித்த திரைப்படம் என் ராசாவின் மனசிலே என்கிற திரைப்படம். இந்த திரைப்படத்தில் ராஜ்கிரனுக்கு ஜோடியாக நடித்த பொழுது மீனாவிற்கு வயது 16 மட்டுமே. அப்பொழுதே சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தியதன் காரணமாக தொடர்ந்து மீனாவிற்கு வாய்ப்புகள் வர துவங்கின.

இந்த நிலையில் அவ்வை சண்முகி திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிப்பதற்கான வாய்ப்பு மீனாவிற்கு கிடைத்தது. அப்பொழுது கமல்ஹாசன் உடன் நடிக்கும் நடிகைகள் அனைவரும் அவருடன் ஒரு முத்தக் காட்சியில் நடிக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக இருந்தது.

இந்த விஷயம் மீனாவுக்கும் தெரியும் என்றாலும் அந்த படத்திற்கு ஒப்புக்கொள்ளும் பொழுது அந்த விஷயத்தை அவர் மறந்து இருந்தார். இந்நிலையில் படப்பிடிப்பு துவங்கி இரண்டாவது நாளே கமல்ஹாசனுடன் முத்த காட்சியில் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் அழைத்த பொழுது மீனாவிற்கு கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருந்தது.

அவர் தனது தாயிடம் சென்று எனக்கு முத்தக்காட்சியில் நடிக்க எல்லாம் விருப்பம் இல்லை அதை இயக்குனரிடம் எப்படியாவது கூறுங்கள் என்று கூறியுள்ளார். ஆனால் மீனாவின் அம்மாவும் இது குறித்து இயக்குனரிடம் கூற யோசித்து இருக்கிறார். இதனால் மீனா மிகவும் வருத்தப்பட்டு கண்ணீர் விட்டு அழ துவங்கி விட்டார்.

இந்த நிலையில் வேறு வழியின்றி முத்தக் காட்சியில் நடிக்க சென்று வருகிறார் மீனா ஆனால் நல்ல வேலையாக அன்று கமலுக்கு அதை முத்தாட்சியாக கொண்டு போக வேண்டாம் என்று தோன்றவே அந்த காட்சியை முத்தாட்சியாக அமையாமல் போனது இந்த விஷயத்தை மீனா ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.

To Top