பெரும் அரசியல்வாதியின் மருமகளாகும் நடிகை மேகா ஆகாஷ்.. விரைவில் திருமணம்!.

தற்போது சமூக வலைத்தளங்களில் அனைவரும் பேசக் கூடிய ஹாட் டாப்பிக்காக இருந்து வரும் விஷயம் என்றால் அது நடிகை மேகா ஆகாஷின் நிச்சயதார்த்தம் தான். எந்த ஒரு ஆரவாரமும் இல்லாமல் தன் குடும்பம், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் பங்கேற்கும்படி நிச்சயதார்த்தத்தை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் நடிகை மேகா ஆகாஷ்.

இது நடிகை மேகா ஆகாஷ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்து வந்தாலும், அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். தற்போதுமேகா ஆகாஷ் திருமணம் செய்து கொள்ளப் போகும் நபர் பற்றிய தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை மேகா ஆகாஷ்

தமிழ், தெலுங்கு ஆகிய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு பிரபலம் அடைந்த நடிகை மேக ஆகாஷ். இவர் தமிழில் பேட்டை திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நடித்ததன் மூலம் மக்களிடையே பிரபலமடைந்தார்.

தெலுங்கில் தன்னுடைய முதல் படமான லை என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். மேலும் தமிழ் திரைப்படமான ஒரு பக்க கதையில் நடித்ததன் மூலம் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கினார். அதன் பிறகு தமிழில் என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது, ரஜினியுடன் பேட்டை திரைப்படத்திலும் நடித்து புகழடைந்தார். பல படங்களின் நடித்த மேகா ஆகாஷ் கடைசியாக தமிழில் விஜய் ஆண்டனி உடன் மழை பிடிக்காத மனிதன் என்ற படத்தில் நடித்திருந்தார்.

megha akash
Social Media Bar

தெலுங்கில் பிரபல நடிகையாக வலம் வரும் மேகா ஆகாஷ் ராஜ ராஜ சோரா மற்றும் டியர் மேகா ஆகிய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தெலுங்கு ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு பெற்று நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் மிக தனது நீண்ட நாள் காதலரான சாய் விஷ்ணுவை திருமணம் செய்து கொள்ளப் போகிறார். இருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பிரபல அரசியல்வாதியின் மருமகளாக மேகா ஆகாஷ்

இந்நிலையில் மேகா ஆகாஷ் திருமணம் செய்து கொள்ளப் போகும் நபர் பிரபல அரசியல்வாதி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழ்நாடு மாநில தலைவராகவும் மத்திய, மாநில அமைச்சராக பொறுப்புகளை வைத்த காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசனின் மகன் என்பது தற்போது வெளியாகி இருக்கிறது.

megha akash

திருநாவுக்கரசரின் இரண்டாவது மகன் தான் மேகா ஆகாஷ் திருமணம் செய்து கொள்ளப் போகும் சாய் விஷ்ணு. இவர் கபாலி, காலா திரைப்படங்களில் இயக்குனர் பா. ரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது இவர்களின் நிச்சயதார்த்தத்திற்கு அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில், கூடிய விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகும் தேதியையும் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Popular News

Categories

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.