இந்தியாவில் ஹாலிவுட் போலவே நிறைய சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் அவை பெரும்பாலும் ஹாலிவுட் தாக்கத்திலேயே வந்திருப்பதை பார்க்க முடியும்.
கிரிஸ் மாதிரியான திரைப்படங்களில் கூட ஹாலிவுட் தாக்கத்தை தான் அதிகமாக பார்க்க முடியும். ஆனால் அப்படி எல்லாம் இல்லாமல் நம்ம ஊர் சூப்பர் ஹீரோ என நினைக்கும் வகையிலான ஒரு சூப்பர் ஹீரோவாக வந்த திரைப்படம்தான் மின்னல் முரளி.
மின்னல் முரளி திரைப்படத்தைப் பொறுத்தவரை ஒருநாள் வானத்தில் இருந்து ஒரு கிராமத்தில் இருக்கும் இரண்டு இளைஞர்களுக்கு இடி விழுகிறது அந்த இடியின் மூலமாக இருவருக்குமே வெவ்வேறு விதமான சக்திகள் கிடைக்கின்றன.
அதை ஒருவர் ஆக்கபூர்வமாகவும் மற்றொருவர் தீமையாகவும் பயன்படுத்துகிறார். இந்த நிலையில் தீமையாக பயன்படுத்தும் அந்த நபரை ஹீரோ எப்படி ஜெயிக்கப் போகிறார் என்பதுதான் கதையாக இருக்கிறது.
இதில் வில்லன் கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம் நடித்திருந்தார் கதாநாயகனாக டோவினோ தாமஸ் நடித்து இருக்கிறார். இந்த திரைப்படத்தை பிரபல நடிகரான பாசில் ஜோசப் தான் இயக்கி இருக்கிறார்.
படத்தில் உணர்வுபூர்வமாக வைத்திருந்த பல விஷயங்கள் மனதை தொடுவதாக இருந்தது. உதாரணத்திற்கு டொவினோ தாமஸிற்கு சக்திகள் கிடைத்த பிறகு அவர் அதை ஆக்கபூர்வமான வழிகளில் எல்லாம் பயன்படுத்த மாட்டார். ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு தான் அவருடைய அப்பாவின் கதை டொவினோவிற்கு தெரியும்.
கதாநாயகனின் அப்பா அவர் காலகட்டத்தில் நாடக கலைஞராக இருந்திருப்பார் அப்பொழுது அவர் ஒரு நாடகத்திற்கு செல்லும் பொழுது அங்கே வெடி விபத்து ஏற்பட்டுவிடும், அந்த வெடி விபத்தில் சிக்கி கொண்ட பலரையும் காப்பாற்ற முயற்சி செய்வார் கதாநாயகனின் தந்தை.
அந்த சமயத்தில் அவர் இறந்து விடுவார் எனவே தனது தந்தை போலவே தானும் மற்றவர்களை காப்பாற்றும் ஒரு நபராக மாற வேண்டும் என்று முடிவு செய்வார் கதாநாயகன். அவரது தந்தை கடைசியாக ஒரு புது நாடகத்திற்கான கதையை எழுதி இருப்பார்.
அந்த நாடகத்தின் பெயர்தான் மின்னல் முரளி அதையே தனக்கான சூப்பர் ஹீரோ பெயராக கதாநாயகன் வைத்துக் கொள்வார். இப்படியாக படத்தில் ஒவ்வொரு விஷயங்களுக்கும் பின்னால் இருக்கும் காரணங்கள் மிகச் சிறப்பாக இருந்தது மின்னல் முரளி திரைப்படம் தென் இந்திய சினிமாவில் ஒரு சிறந்த சூப்பர் ஹீரோ திரைப்படம் என்று கூறலாம்.