கே.ஜி.எஃப் காந்தாரா பட பிரபலங்களை சந்தித்த பிரதமர் மோடி – பிரபலமாகும் புகைப்படங்கள்

இந்திய திரையுலகில் தெலுங்கு சினிமாவிற்கு பிறகு தொடர்ந்து அதிக வசூல் சாதனை செய்யக்கூடிய படங்களை கன்னட சினிமா வழங்கி வருகிறது. தெலுங்கில் ஆர்.ஆர்.ஆர் பாகுபலி போன்ற திரைப்படங்கள் ஆயிரம் கோடிக்கு ஓடி வசூல் சாதனை செய்தன.

Social Media Bar

கன்னடத்தில் கே.ஜி.எஃப், காந்தாரா போன்ற திரைப்படங்கள் அதிக வசூல் சாதனை செய்தன. இந்த நிலையில் பெங்களூரில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் சர்வதேச விமான கண்காட்சியானது நேற்று தொடங்கப்பட்டது.

ஆசியாவிலேயே இது மிகப்பெரிய கண்காட்சி என்பதால் இதனை துவங்கி வைப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி விழாவில் கலந்துக்கொண்டார். கன்னட சினிமா வளர்ந்து வருவதை தொடர்ந்து அவர் கன்னட பிரபலங்களை சந்திக்க நினைத்தார்.

எனவே புனித் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினி, கே.ஜி.எஃப் கதாநாயகர் யஷ் மற்றும் காந்தாரா படத்தின் கதாநாயகனும் இயக்குனரும் ஆன ரிஷப் ஷெட்டி மூவரையும் சந்தித்து பேசினார். கன்னட சினிமாவின் வளர்ச்சி குறித்து அவர்களிடம் பேசினார் மோடி. தற்சமயம் இந்த புகைப்படங்கள் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.