Connect with us

விஜய் சேதுபதி நடிச்சிருந்தா வேற லெவல இருந்திருக்கும்!.. 800 படத்தின் மாஸ் ட்ரைலர் வெளியானது!..

Cinema History

விஜய் சேதுபதி நடிச்சிருந்தா வேற லெவல இருந்திருக்கும்!.. 800 படத்தின் மாஸ் ட்ரைலர் வெளியானது!..

cinepettai.com cinepettai.com

இந்தியாவில் சாதனை படைத்த இளைஞர்களின் பல கதைகள் திரைப்படமாக்கப்பட்டு வருகின்றன. இப்படி வருகிற திரைப்படங்கள் யாவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகின்றன. முக்கியமாக கிரிக்கெட் வீரர்களின் படங்களுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு நிலவி வருகிறது.

ஏற்கனவே கபில்தேவ்வின் கிரிக்கெட் விளையாட்டை அடிப்படையாக கொண்டு 83 என்கிற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதே போல இலங்கை அணிக்கு விளையாடிய தமிழ் வீரர் முத்தையா முரளிதரனின் கதையை படமாக்க திட்டமிட்டனர்.

முதன் முதலாக கிரிக்கெட்டில் ஒரு பவுலருக்கு திரைப்படம் எடுப்பது இதுவே முதல் முறை ஆகும். இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதிதான் கதாநாயகனாக நடிக்க இருந்தார். ஆனால் சில சர்ச்சைகள் காரணமாக படத்தில் அவர் நடிக்க முடியாமல் போனது.

அதனையடுத்து இந்த படத்தில் மதுர் மிட்டால் என்பவர் கதாநாயகனாக நடித்துள்ளார். ஒரு தேயிலை தொழிலாளியின் மகனாக பிறந்த முத்தையா முரளிதரன் எப்படி இவ்வளவு பெரிய சிகரங்களை தொட்டார் என்பதை பேசும் வகையில் இந்த படம் அமைந்துள்ளது.

தற்சமயம் படத்தின் ட்ரைலர் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் மட்டும் விஜய் சேதுபதி நடித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என அவரது ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

POPULAR POSTS

vijay sree leela
kavin
vijay ghilli
vairamuthu-yaashika
vishal vijay ghilli
kpy bala
To Top