Connect with us

பணம் திருடும் கும்பலாக விஜய் சேதுபதி..! ஹாலிவுட் தரத்தில் வரும் ஏஸ் திரைப்படம்.!

Tamil Trailer

பணம் திருடும் கும்பலாக விஜய் சேதுபதி..! ஹாலிவுட் தரத்தில் வரும் ஏஸ் திரைப்படம்.!

Social Media Bar

நடிகர் தனுஷிற்கு பிறகு தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. சமீபத்தில் அவர் நடித்த திரைப்படம் மகாராஜா. மகாராஜா திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றது. தொடர்ந்து விஜய் சேதுபதி வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து வருகிறார்.

இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் ஏற்கனவே நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ரயில் தொடர்பான கதைக்களத்தை கொண்ட படம் என கூறப்படுகிறது.

விஜய் சேதுபதி தற்சமயம் ஆறுமுக குமார் என்கிற இயக்குனரின் இயக்கத்தில் ஏஸ் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைபடத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.

படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகியுள்ளது. படத்தின் கதைப்படி விஜய் சேதுபதி கெசினோ பந்தயம் விளையாடும் நபராக இருக்கிறார். இந்த சூதாட்டத்தில் கை மாறும் பெரிய தொகையை திருடுவதற்கு அவர் வருவதாக கதை களம் இருக்கும் என பேச்சுக்கள் இருக்கின்றன.

ஹாலிவுட்டில் வரும் பாணியிலான இந்த கதை அமைப்பிற்கு வரவேற்பு கூடி வருகிறது.

 

 

 

Articles

parle g
madampatty rangaraj
To Top