Tamil Cinema News
இவன் இதெல்லாம் பண்ணுவானானு இருந்துச்சு… தினமும் கதையை மாத்துவேன்.. லோகேஷ் கனகராஜின் அறியாத பக்கங்கள்.!
தமிழ் சினிமா இயக்குனர்களில் முக்கியமானவராக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருந்து வருகிறார். பெரும்பாலும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்கள் என்றாலே பெரும் வெற்றியைதான் பெற்று தருகிறது. இந்த நிலையில் லியோ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் திரைப்படம் கூலி.
இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் படம் நடிக்க வேண்டும் என்கிற ஆசை வெகு நாட்களாகவே மக்கள் மத்தியில் இருந்துக்கொண்டுதான் இருந்தது.
அந்த நிலையில் கூலி திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் நடிகர்களுக்காக காட்சிகளை மாற்றி அமைப்பது குறித்து லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். அதில் அவர் கூறும்போது நடிகர்களுக்காக நாம் ஒரு கதையை எழுதுவோம்.
ஆனால் அவர்கள் நடிக்கும்போது வேறு மாதிரியான நடிப்பை கொடுப்பார்கள். இதனால் அவர்கள் நடிப்புக்கு தகுந்தாற் போல காட்சிகளை மாற்றி அமைக்க வேண்டி இருக்கிறது. நடிகர்களின் நடிப்பை பார்க்கும்போது இவன் இதெல்லாம் பண்ணுறானே, இவனுக்கு காட்சிகளையும் நல்லா வைக்கணும்னு யோசிக்க வேண்டி இருக்கு என இதுக்குறித்து லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.
