Tamil Cinema News
குடும்பஸ்தன் திரைப்படத்தில் அந்த கதாபாத்திரத்தில் நடித்த மை டியர் பூதம் கதாபாத்திரம்!.
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக மணிகண்டன் நடித்த குடும்பஸ்தன் திரைப்படம் இருந்தது. குடும்பஸ்தன் திரைப்படத்தில் மணிகண்டன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்த திரைப்படத்தில் நடித்த பலரும் நக்கலைட்ஸ் என்னும் யூ ட்யூப் சேனலை சேர்ந்தவர்கள்தான். இந்த நிலையில் இந்த படம் குறைந்த பட்ஜெட் படம் என்பதால் பிரபலமான ஆட்கள் என யாரையும் இந்த படத்தில் நடிக்க வைக்கவில்லை.
ஆனால் வசூல் ரீதியாக இந்த படம் பெரிய வரவேற்பை பெற்று தந்தது. இந்த நிலையில் இந்த படத்தை அடுத்து நடிகர் மணிகண்டன் தொடர்ந்து பல பட வாய்ப்புகளை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் இந்த படத்தில் மை டியர் பூதம் சீரியலில் நடித்த அபிலாஷ் நடித்துள்ளார். 90ஸ் கிட்ஸ் மத்தியில் மிக பிரபலமான நிகழ்ச்சியாக மை டியர் பூதம் நிகழ்ச்சி இருந்து வந்தது. அதில் மூசா என்னும் கதாநாயகன் கதாபாத்திரத்தில்தான் அபிலாஷ் நடித்திருந்தார்.
வரவேற்பை பெற்ற சீரியல் என்றாலும் அதன் பட்ஜெட் காரணமாக பாதியிலேயே மை டியர் பூதம் சீரியல் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் வெகு வருடங்கள் கழித்து அபிலாஷ் மணிகண்டன் நடித்த குடும்பஸ்தன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
