Tamil Cinema News
புருஷன் பொண்டாட்டியா நடிக்க சொன்னா நிஜமாவே.. ஷாக்கிங் கொடுத்த மணிகண்டன்..!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய நடிகர்களில் மிக முக்கியமானவராக தற்சமயம் மணிகண்டன் இருந்து வருகிறார். வெகு காலங்களாகவே தமிழ் சினிமாவில் பல துறைகளில் பணிபுரிந்து வந்த மணிகண்டன் இயக்குனராக வேண்டும் என்று தான் ஆசைப்பட்டார்.
ஆனால் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்த அவருக்கு பிறகு கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து குட் நைட் என்கிற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார்.
அந்த திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது. தொடர்ந்து லவ்வர் என்கிற திரைப்படத்தில் நடித்தார். அடுத்து குடும்பஸ்தன் என்கிற திரைப்படத்தில் நடித்தார். இந்த வருடம் வெளியான குடும்பஸ்தன் திரைப்படம் ஒரு வெற்றி படமாக அமைந்தது.
இந்த நிலையில் அந்த திரைப்படத்தில் கணவன் மனைவி கதாபாத்திரம் மிக சிறப்பாக அமைந்திருந்தது இந்த நிலையில் இது குறித்து மணிகண்டன் கூறியிருந்தார்.
அதில் அவர் கூறும் பொழுது படப்பிடிப்புக்கு வந்து கதாநாயகியாக நடிக்கும் நடிகையை சந்தித்த பிறகு எடுத்த உடனே எங்களுக்கு நெருக்கமான காட்சிகள் படமாக்கப்பட்டன.
ஆனால் எங்களால் அதை நடிக்கவே முடியவில்லை பல காட்சிகள் சென்ற பிறகுதான் ஓரளவுக்கு எங்களால் சேர்ந்தே நடிக்க முடிந்தது. அதனால் தான் குடும்பஸ்தன் திரைப்படத்தில் கணவன் மனைவி காட்சிகள் எல்லாம் தத்துரூபமாக வந்திருந்தன என்று மணிகண்டன் விளக்கி இருக்கிறார்
