Connect with us

2 வருஷமா எதுவுமே இல்ல… மேடையிலேயே ரசிகர்கள் குறித்து கண் கலங்கிய சமந்தா..!

Tamil Cinema News

2 வருஷமா எதுவுமே இல்ல… மேடையிலேயே ரசிகர்கள் குறித்து கண் கலங்கிய சமந்தா..!

Social Media Bar

தமிழ் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் மிகப் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை சமந்தா தமிழில் பானா காத்தாடி, மாஸ்கோவின் காவேரி மாதிரியான திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக இவருக்கு ஒரு அறிமுகம் கிடைத்தது.

அதற்குப் பிறகு அவருக்கு தெலுங்கில் வெளியான நான் ஈ திரைப்படம் தான் முக்கிய படமாக அமைந்தது. அந்த திரைப்படத்திற்கு பிறகு தமிழ் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் சமந்தாவிற்கு வாய்ப்புகள் அதிகமாக வரத் துவங்கியது.

இந்த நிலையில் நல்ல மார்க்கெட்டை பிடித்து வந்த சமந்தா பெரும் நடிகர்களுடன் சேர்ந்து நடித்து வந்தார். ஆனால் சில வருடங்களுக்கு முன்பு அவருக்கு மயோசிட்டிஸ் என்கிற ஒரு அரிய வகை நோய் ஏற்பட்டது.

அதன் காரணமாக சினிமாவில் நடிக்க முடியாமல் போனது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு மேடையில் பேசிய சமந்தா கூறும் பொழுது இரண்டு வருஷமா நான் சினிமாவிலேயே இல்லை என் படம் எதுவும் வெற்றி கொடுக்கவில்லை.

இருந்தாலும் கூட எனக்கு இன்னமும் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது என்றால் அதற்கு ரசிகர்கள் தான் காரணம் என்று கண்கலங்கி அவர்களுக்கு தலை சாய்த்து வணக்கம் வைத்திருக்கிறார் சமந்தா.

To Top